scorecardresearch

சித்த ராமையா VS டி.கே. சிவக்குமார்: பலம், பலவீனம் என்ன?

நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு, கர்நாடக முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் மேலிடம் இன்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

Tamil News
Tamil News Updates

நீண்ட சஸ்பென்ஸுக்குப் பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடத் தலைமை முடிவு செய்யும் எனத் தெரிகிறது.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநிலக் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமாரும் இந்த உயர் பதவி போட்டியில் உள்ளனர்.

இந்த நிலையில் இருவரின் பலம் மற்றும் பலவீனங்கள் இங்கே உள்ளன.

சித்த ராமையா:

பலம்

  • கட்சி வட்டாரங்களின்படி, கர்நாடகாவில் 135 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 90 பேர் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
  • மாநில அரசியலில் அதிக அனுபவம் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர்.
  • முஸ்லிம் மற்றும் குருபா சமூகத்தினரிடையே பரந்த ஆதரவு உள்ள தலைவர்

பலவீனங்கள்

2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை மீண்டும் கொண்டு வரத் தவறியது அவருக்கு எதிராக கருதப்படலாம்.

அச்சுறுத்தல்
சித்தராமையாவை புறக்கணிப்பது ஆபத்தான முடிவாக இருக்கும்.குருபா மற்றும் முஸ்லீம் சமூகங்கள் கர்நாடகம் முழுவதும் பரவியுள்ளன, மேலும் பல கட்சி எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவின் பிரபலத்தை தங்கள் இடங்களுக்கு நம்பியிருக்கிறார்கள்.

வாய்ப்பு

சித்தராமையாவை முதல்வராக நியமிப்பது காங்கிரஸுக்கு அதன் சொந்த எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி சிறுபான்மை சமூகத்தினரிடமும் அதிக சாதகமாக அமையும்.

டி.கே. சிவக்குமார்

பலம்

  • முக்கியமான சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக கர்நாடகாவின் அமோக வெற்றிக்கு வித்திட்டது.
  • அரசியல் செல்வாக்கு பெற்ற லிங்காயத் மற்றும் வொக்கலிகா சமூகங்களின் தலைவர்களால் வலுவாக ஆதரிக்கப்படுகிறார்.
  • மாநிலத் தலைவர் பதவியில் இருந்த காலத்தில் கட்சியை இக்கட்டான நேரத்தில் வெற்றிகரமாக வழிநடத்தினார்.
  • சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் ஆதரவு உள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலுடன் நெருக்கமாக பணியாற்றினார்.

பலவீனங்கள்

  • வலுவான எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் இல்லை.
  • வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளது.

அச்சுறுத்தல்

டி.கே. சிவக்குமாரின் வருத்தம் காங்கிரஸிற்கு நல்லதல்ல.

வாய்ப்பு

சிவக்குமார் தலைமையில், 2018 ஆம் ஆண்டை விட லிங்காயத் பெல்ட்களில் காங்கிரஸ் 28 இடங்களை கூடுதலாக வென்றது. அவர் முதல்வர் பதவிக்கு ஏறுவது இந்த முக்கியமான வாக்கு வங்கியை அதிகரிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Siddaramaiah vs dk shivakumar for karnataka cm a swot analysis