கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா இந்த தேர்தலில் மைசூரு பகுதியில் உள்ள தனது சொந்த தொகுதியான வருணாவில் மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று (ஏப்ரல் 19) வேட்புமனுத் தாக்கல் செய்த அவர் முன்னதாக கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன்பின் பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை விமர்சனம் செய்தார். தன்னை தோற்கடிக்க பாஜக-மதச்சார்பற்ற ஜனதா தளம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். சித்தராமையா 2023-ல் தனது கடைசி தேர்தலில் உணர்ச்சிகளை பயன்படுத்தி விளையாடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்தப் பின் பேசிய சித்தராமையா, வருணாவில் தன்னை தோற்கடிக்க பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும், சதியை முறியடிக்க வாக்காளர்களின் ஆதரவை கோருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து, பாஜக இந்த தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தவில்லை. பெங்களூருவில் வசிக்கும் வி. சோமண்ணாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதற்கு பாஜக- ஜேடிஎஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் விளைவாக தலித் வாக்குகளைப் பிரிப்பதற்காக
ஜேடிஎஸ் பாரதி சங்கரை களமிறக்கி உள்ளனர் என்றார்.
என்னை தோற்கடிக்க பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் எத்தனை கோடி ரூபாய் செலவழித்தாலும், என்ன தந்திரங்களைச் செய்தாலும், எங்கள் பகுதி வருணா மக்கள் இந்த முன்னெடுப்புகளை புறக்கணித்து என்னை ஆசீர்வதிப்பார்கள்,
பாஜக பயத்தில் உள்ளது. ஒட்டுமொத்த மாநில மக்களும் சித்தராமையாவுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் அவர்கள் என்னை எப்படியாவது தோற்கடிக்க விரும்புகிறார்கள். சாமுண்டி (மைசூர் பகுதியில் பிரபலமான தெய்வம்) மக்கள் இந்த வசீகரத்திற்கு விழமாட்டார்கள். நான் இந்தப் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். வருணா ஹோப்லி (நிறைய கிராமங்கள் ) எனது சொந்த ஹோப்லி. நான் பிறந்த சித்தராமனஹூண்டி கிராமம் இந்தத் தொகுதியில்தான் இருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள தொகுதிகள் முழுவதும் பரந்த ஆதரவுடன் ஒரு வெகுஜனத் தலைவராக இருக்கிறார். இருந்தும் அவரின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) குருபா சமூகம் மற்றும் சிறுபான்மையினர் சமூகத்தில் 8 முறை எம்.எல்.ஏ-வான சித்தராமையா சமீப காலங்களில் தனக்கு ஏற்ற தொகுதியை தேர்ந்தெடுப்பதில் போராடினார், குருபாக்கள் மற்றும் வொக்கலிகாக்கள், பழங்குடி வால்மீகிகள் மற்றும் தலித்துகள் போன்ற சமூகங்களுக்கு இடையே அவரது வாய்ப்புகளை மறுக்கவில்லை. 2018-ம் ஆண்டு தனது இளைய மகன் டாக்டர் யதீந்திர சித்தராமையாவுக்கு வருணா தொகுதியை விட்டுக் கொடுத்த சித்தராமையா தற்போது மீண்டும் அவரே அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.
“இது எனது கடைசித் தேர்தல் என்பதால், நான் இங்கிருந்து போட்டியிடுகிறேன். நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றாலும் அரசியலில் இருப்பேன். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மாநில மக்கள் நம்புகிறார்கள். பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. அரசை அழித்துவிட்டார்கள். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. ஏழைகளுக்கான திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஊழல் மலிந்து கிடக்கிறது, 40-50% கமிஷன் லஞ்சமாக கேட்கப்படுகிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும்” என்று சித்தராமையா புதன்கிழமை கூறினார்.
ஜனதா தளம் ஒருபோதும் தனித்து தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. பாஜகவின் அழைப்புக்கு காத்திருக்கிறார்கள், என்னிடம் சில தகவல்கள் உள்ளன. மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்துள்ளேன். எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.
பேரணியின் போது, சித்தராமையா தனது 17 வயது கல்லூரி செல்லும் பேரன் தவான் ராகேஷை அறிமுகப்படுத்தினார், “இது எனக்கு கடைசி தேர்தல். அதன் பிறகு, யதீந்திரா மற்றும் தவான் ராகேஷ் உள்ளனர். ராகேஷ் படித்து வருகிறார். ராகேஷ் இங்கு மிகவும் பிரபலமாக உள்ளார் என்று கூறினார்.
2008 மற்றும் 2013 ஆகிய 2 தேர்தலில் இந்த தொகுதியில் இருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு முறையும் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். முதல் முறை தேர்தலில் காவல்துறை அதிகாரி ரேவண்ணசித்தையாவை (பா.ஜ.க) விட 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். 2013ல் இரண்டாவது முறையாக கபு சித்தலிங்க சுவாமியை எதிர்த்து 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். யதீந்திரா 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய நீங்கள் உதவ வேண்டும்” என்று சித்தராமையா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“