scorecardresearch

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது – சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது – சித்தராமையா

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு உரிய நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முடியும் வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மைசூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ‘காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன சொன்னதோ, மத்திய அரசு அதை செயல்படுத்தினால் போதும். காவிரி மேலாண்மை வாரியம் அமைய கர்நாடக அரசு ஒத்துக் கொள்ளாது’ என்று தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Siddharamaiah about cauver case