பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் கடந்த முறை சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்பிறகு பஞ்சாபில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
பஞ்சாப் அமைச்சரவையில் சித்துவுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது இந்நிலையில் அவருக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மின்சார துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆனால் இன்று வரை அவர் அமைச்சர் பதவியை ஏற்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் வேதனை அடைந்த சித்துவுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
navjot singh sidhu, congress, punjab
இதனால் விரக்தி அடைந்த சித்து, தனது அமைச்சர் பதவியை ராஜினிமா செய்தார். கடந்த 10ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்த சித்து அந்த கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு அனுப்பிவிட்டார். அந்த கடிதத்தின் நகலை, தனது டுவிட்டர் பக்கத்தில் சித்து வெளியிட்டு, தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார். இது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.