சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்

அமெரிக்காவின் புவியியல் நுண்ணறிவைப் பயன்படுத்த இந்தியாவை அனுமதிக்கும்

By: October 20, 2020, 12:25:11 PM

 Shubhajit Roy , Krishn Kaushik

Signal to China: Quad navies to sail together, Indo-US pact on table :  லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதட்டம் நீடித்து வருகின்ற நிலையில் தென் சீன கடலில் மேலும் பதட்டமான சூழல் உருவாகி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களை மலபார் பயிற்சிக்கு அடுத்த மாதம் அனுப்புகிறது.

இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்கள் வருகின்ற அக்டோபர் 26 – 27 தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக Basic Exchange and Cooperation Agreement (BECA) ஒப்பந்தத்தை முடிக்க டெல்லியும் வாஷிங்டனும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஒரு முக்கிய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் புவியியல் நுண்ணறிவைப் பயன்படுத்தவும், தானியங்கு அமைப்புகள் மற்றும் ஏவுகணைகள் மற்றும் ஆயுத ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களின் துல்லியத்தை மேம்படுத்தவும் இந்தியாவை இது அனுமதிக்கும். பிப்ரவரியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் BECA இன் ஆரம்ப முடிவுக்கு அழைப்பு விடுத்தனர்.

நவம்பரில் நடைபெறும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவும் இணையும் என்று திங்கள்கிழமை இந்தியா அறிவித்தது. இது நான்கு நாடுகளுக்கு மத்தியில் நடைபெறும் முதன்மை ராணுவ பயிற்சியாகும். 2017ம் ஆண்டு தான் குவாட் புத்துயிர் பெற்றது. அதற்கு முன்பு இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா என்று முத்தரப்பு பயிசிகள் தான் நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பானில் இந்த பயிற்சிகள் நடைபெற்றது. மேற்பரப்பில் நடைபெறும் செயல்பாடுகள், ஏர் டொமைன், சஃப் சர்ஃபேஸ் பகுதிகளில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. நீர்மூழ்கி எதிர்ப்பு போர், வான்வழி எதிர்ப்பு மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு துப்பாக்கி சூடுதல், கடல்சார் இடைமறிப்பு நடவடிக்கைகள் ( MIO) விசிட் போர்டு தேடல் மற்றும் கைப்பற்றல் (வி.பி.எஸ்.எஸ்) போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

பி.இ.சி.ஏவை விரைவாக முடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் குவாட் நாடுகளின் மலபார் பயிற்சிகள் சீனாவுக்கு எதிராக ஒரு சமிக்ஞையை அனுப்பியதாகவே கருத்தபப்டுகிறது. சீனாவின் செயல்பாட்டினை கடந்தவாரம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், க்ரிட்டிகல் செக்யூரிட்டி சேலஞ்ச் என்று கூறியுள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ வீரர்கள் மே மாத ஆரம்பத்தில் இருந்து எல்லையில் பதட்டமான சூழலை சந்தித்து வருகின்றனர்.

To read this article in English

அக்டோபர் 26, 27 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்தியா அமெரிக்கா ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளார் மார்க் டி எஸ்பெர் இந்தியாவிற்கு வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு ட்ரெம்ப் வந்து சென்ற பின்னால், பி.இ.சி.ஏவில் முன் முடிவினை எட்ட இரண்டு தரப்பும் பணியாற்றி வருகிறது. இந்த நடவடிக்கை ஒப்பந்தங்களில் கடைசி ஒன்றாகும், மேலும் இது பெரும்பாலும் புவி-இடஞ்சார்ந்த புலனாய்வு தொடர்பானது, பாதுகாப்பு நோக்கங்களுக்காக வரைபடங்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. அமெரிக்கா ஒரு வரைவு ஒப்பந்தத்தை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது, மேலும் இந்த ஏற்பாட்டின் கீழ் பகிரப்பட வேண்டிய தகவல்கள் குறித்து இந்தியா கூடுதல் விவரங்களை கோரியது.

BECA கையெழுத்திடவில்லை என்றாலும், இரு தரப்பினரும் இந்த வருகையின் போது ஒப்பந்தத்தின் முடிவை அறிவிக்க முடிவு செய்துள்ளது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2018-ல், இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் 2 + 2 உரையாடலுக்குப் பிறகு – அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஆகியோரை சந்தித்தனர் . இரு தரப்பினரும் தகவல்தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (COMCASA) கையெழுத்திட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

முன்னதாக, ஆகஸ்ட் 2016 இல், இந்தியாவும் அமெரிக்காவும் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் மெமோராண்டம் ஒப்பந்தத்தில் (LEMOA) கையெழுத்திட்டன, இது ஒவ்வொரு நாட்டின் இராணுவத்தையும் மற்றவர்களின் ராணுவ தளங்களில் பணியாற்ற அனுமதிக்கிறது.
இந்த ஒப்பந்தங்கள் மலபார் உடற்பயிற்சியுடன் நன்கு இணைகின்றன, ஏனெனில் இந்தியா அனைத்து குவாட் நாடுகளுடன் LEMOA பதிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியா கடல்சார் பாதுகாப்பு களத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முயன்று வருகிறது, ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வெளிச்சத்தில், மலபார் 2020 ஆஸ்திரேலிய கடற்படையின் பங்களிப்பைக் காணும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறியுள்ளது.

‘non-contact-at sea’ என்ற அடிப்படையில் இந்த ஆண்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் ஈடுபடும் நாடுகளுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை வலிமைப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடல்களத்தில் பாதுகாப்பினை மேம்படுத்த இந்த பயிற்சி உதவும். இப்பயிற்சியில் ஈடுபடும் நபர்கள் சுதந்திரமாக, வெளிப்படையாக இந்தோ-பசிஃபிக் கூட்டுறவை ஆதிரிக்கின்றனர். அதே நேரத்தில் சர்வதேச எல்லைகள் தொடர்பான விதிகளை பின்பற்றுவர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் அழைப்பை ஏற்று இந்த ஆண்டு எக்செர்சைஸ் மலபார் 2020யில் பங்கேற்போம் என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரிஸ் பைனே கூறியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை நவம்பர் 2020ம் ஆண்டு, இந்த பயிற்சி ஒன்றிணைக்கும் என்றும் அவர் கூறினார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ், இந்த பயிற்சியை ஆஸ்திரேலியா பாதுகாப்புத்துறையின் ஒரு மைல்கல் என்று கூறியுள்ளார்.

“மலபார் போன்ற உயர்தர இராணுவப் பயிற்சிகள் ஆஸ்திரேலியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதற்கும், நெருங்கிய கூட்டாளர்களுடன் இயங்கக்கூடிய தன்மையை உருவாக்கவும், திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக்ஐ ஆதரிப்பதற்கான எங்கள் கூட்டுத் தீர்மானத்தை நிரூபிப்பதற்கும் உதவும் என்று ரெனால்ட்ஸ் கூறியுள்ளார்.

மலபார் பயிற்சி இந்தோ-பசிபிக் பகுதியில் அமைந்திருக்கும் நான்கு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஆழ்ந்த நம்பிக்கையையும் பொதுவான பாதுகாப்பு நலன்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான விருப்பத்தையும் காட்டுகிறது.

இந்தியாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவில் இது மிக முக்கியமான ஒன்றாகும் என்று பைன் கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் ஸ்திரதன்மையை அதிகரிக்க இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இணைந்து செயல்படக்கூடிய வாய்ப்பினை இது அளிக்கும் என்றும் கூறினார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Signal to china quad navies to sail together indo us pact on table

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X