Advertisment

கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பிஎஃப்ஐ அமைப்பிலும் இந்தியா இருந்தது: எதிர்க்கட்சிகள் மீது மோடி விமர்சனம்

“நாட்டின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்துங்கள்” என்றும், “நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றிப் பேசுங்கள்” என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.

author-image
WebDesk
New Update
Silent on Manipur PM takes on Oppn at BJP meet INDIA also in East India Company Indian Mujahideen PFI

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு புறப்பட்டபோது எடுத்த படம்.

26 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணியை கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கி இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் வரை பல அமைப்புகளின் பெயர்களில் இந்தியா இருக்கிறது என்று கூறினார்.
மழைக்கால கூட்டத்தொடரின் போது முதன்முறையாக பாஜக எம்.பி.க்களிடம் உரையாற்றிய மோடி, மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க தயாராக இருக்குமாறு கட்சியினரைக் கேட்டு அதன் வியூகத்தை கோடிட்டுக் காட்டினார்.

Advertisment

மேலும், இந்தியா என்ற பெயர் எதிர்க்கட்சிகளின் "மக்களை தவறாக வழிநடத்தும்" முயற்சி என்று பிரதமர் கூறினார். கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியன் முஜாகிதீன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளும் இந்தியா என்ற பெயரை கொண்டிருந்தன” என்றார்.

தொடர்ந்து, “அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் எதிர்க்கட்சியாகவே இருக்கப்போவதை அதன் தலைவர்கள் உணர்ந்ததால் எதிர்க்கட்சிகள் விரக்தியில் உள்ளன” என்றார்.
இதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் மனமுடைந்து போகவோ, திசைதிருப்பவோ வேண்டாம் என்று எம்.பி.க்களுக்கு மோடி கேட்டுக் கொண்டார்.

மற்ற அனைத்து நாடுகளும் தற்போதைய இந்தியத் தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனால்தான் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருவதாகவும் பிரதமர் தனது கட்சியின் எம்.பி.க்களுக்கு நினைவூட்டினார்.

இதற்கிடையில், “பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் தங்கள் பெயருக்கு முன்னால் இந்தியா என்று சேர்ப்பது ஃபேஷன், எதிர்க்கட்சிகளும் அந்நிய சக்திகளின் உதவியுடன் இந்தியாவை பலவீனப்படுத்த இந்தியா என்ற வார்த்தையை ஆதரிக்கின்றன" என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே ட்வீட் செய்துள்ளார்.

மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்: ராகுல் காந்தி

பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ட்விட்டரில், “நாங்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறோம், பிரதமர் சபைக்கு வெளியே ‘இந்தியா’வை ‘கிழக்கிந்திய கம்பெனி’ என்று அழைக்கிறார்.

காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் ‘மதர் இந்தியா’ அதாவது ‘பாரத மாதா’வுடன் இருக்கிறது. ஆங்கிலேயர்களின் அடிமைகள் பாஜகவின் அரசியல் முன்னோர்கள். பிரதமர் மோடி அவர்களே, உங்கள் பேச்சு வார்த்தைகளால் நாட்டின் கவனத்தை திசை திருப்புவதை நிறுத்துங்கள். நாடாளுமன்றத்தில் மணிப்பூரைப் பற்றி பேசுங்கள், இந்தியாவை அதாவது பாரதத்தை குறிவைத்து பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்” என்றார்.

பிரதமரை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், “நீங்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைக்கவும் திரு மோடி. நாங்கள் இந்தியா. மணிப்பூரை குணப்படுத்தவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். அவளுடைய மக்கள் அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மோடி ஜி, நீங்கள் எங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதைச் சொல்லுங்கள். நாங்கள் இந்தியா. மணிப்பூருக்கு உதவியும் அன்பும் தேவை. மணிப்பூரில் இந்தியா என்ற சித்தாந்தத்தை மீண்டும் நிலைநாட்டுவோம். மணிப்பூரின் ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீரை துடைப்போம். மணிப்பூருக்கு மீண்டும் அன்பின் நிறத்தை சேர்க்கும், அவர்களை நேசிக்க கற்றுக்கொடுக்கும்” என்றார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) தலைவர் பிரியங்கா சதுர்வேதி பாராளுமன்றத்திற்கு வெளியே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “பிரதமர் நமது நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்று பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பேசுவது வருத்தமளிக்கிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment