Advertisment

சிங்கு எல்லையில் கொல்லப்பட்டவர் தினக்கூலி; அவரது கிராமத்தினர் கூறுவது என்ன?

Murdered man was daily wager from Tarn Taran, father of three: சிங்கு எல்லையில் கொல்லப்பட்டவர் தினக்கூலி; அவர் எப்படி சிங்கு எல்லைக்கு சென்றார் என்பது மிகப்பெரிய கேள்வி; கிராம மக்கள் கருத்து

author-image
WebDesk
New Update
சிங்கு எல்லையில் கொல்லப்பட்டவர் தினக்கூலி; அவரது கிராமத்தினர் கூறுவது என்ன?

டெல்லியின் சிங்கு எல்லையில் வெள்ளிக்கிழமை நிஹாங் சீக்கியர்களின் குழுவால் கொல்லப்பட்டதாக கூறப்படும், 35 வயதான லாக்பீர் சிங், பஞ்சாபின் டார்ன் தரன் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளி ஆவார். இவர் விவசாயப் போராட்டங்களில் ஒருபோதும் கலந்துக் கொண்டதில்லை என்று ஒரு குடும்ப உறுப்பினர் மற்றும் அவரது கிராமமான சர்பஞ்ச் கிராம மக்கள் தெரிவித்தனர்.

Advertisment

லாக்பீர் தனது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து கடந்த ஐந்து வருடங்களாகப் பிரிந்து, அவரது சகோதரியுடன் சீமா காலன் கிராமத்தில் தங்கியிருந்ததாக கிராமத்தினர் கூறினர். அவர் கடைசியாக செவ்வாய்க்கிழமை கிராமத்தில் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்பு, நாங்கள் டார்ன் தரனில் உள்ள அரசு மருத்துவமனையில் லாக்பீரின் போதை பழக்கத்திற்கான சிகிச்சையைத் தொடங்கினோம். இதனால் அவரது குடும்பத்தினர் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தனர். சிங்குவில் அவர் சில தவறான செயல்களில் ஈடுபட்டிருப்பார் என்று நாங்கள் அஞ்சுகிறோம், ”என்று சர்பஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த அவன்குமார் கூறினார்.

யாராவது அவரை சிங்கு எல்லைக்கு அழைத்துச் சென்று, கொலை செய்யப்பட்ட சூழ்நிலைக்கு அவரை தள்ளினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று லாக்பீரின் மைத்துனர் சுக்செயின் சிங் கூறினார்.

லாக்பீர் மற்றும் அவரது சகோதரி ராஜ் கவுர், கிராமத்தினரால் மதிக்கப்படும் குடும்பமான முன்னாள் ராணுவ வீரர் தர்ஷன் சிங் மற்றும் அவரது மனைவியின் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர் என்று கிராமத்தினர் தெரிவித்தனர். ராஜ் கவுரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

"லாக்பீரின் வளர்ப்பு பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். லாக்பீர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மற்றும் ஒரு உடல் ஊனமுற்ற மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். திருமணத் தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களாக அவரது சகோதரனுடன் தங்கியுள்ளார் ”என்று சர்பஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த குமார் கூறினார்.

“அவருடைய போதை பழக்கமே இந்த சர்ச்சைக்கு காரணம். கடந்த இரண்டு வருடங்களாக அவர் தனது மூன்று மகள்களைப் பார்க்கவில்லை. அவர் தாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தார். அவர் யாருடனும் தொடர்பில் இல்லை" என்று மைத்துனர் சுக்செயின் சிங் கூறினார்.

ஆனால் லாக்பீரின் குடும்பம் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே, இப்போது உள்ள பெரிய கேள்வி, அவர் எப்படி சிங்குவை அடைய முடிந்தது என்பது தான். அந்த நேரத்தில் கிராமத்திலிருந்து சிங்கு எல்லைக்குச் சென்ற ஒரே நபர் லாக்பீர் என்று தரன் தரன் மாவட்ட துணை எஸ்பி சுச்சா சிங் கூறினார்.

அவரிடம் பணம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். செவ்வாய்க்கிழமை, அவர் தனது சகோதரியிடம் 50 ரூபாயைக் கேட்டுள்ளார், சகோதரி அண்டை வீட்டாரிடமிருந்து கடன் வாங்கி கொடுத்துள்ளார். லாக்பீர் உள்ளூர் தானிய சந்தைக்கு வேலைக்காக சென்றார் என்பதையும் நாங்கள் அறிவோம். அதன் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை. இன்று காலை, அவரது கொடூரமான சிதைந்த உடலை டிவியில் பார்த்தோம்,” என்று குமார் கூறினார்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து அவர் டெல்லி எல்லைக்கு சென்றதில்லை. நான் சிங்குவிற்கு இரண்டு ஜாதாக்களை (எதிர்ப்பு ஊர்வலங்கள்) எடுத்து வந்தேன். ஆனால் அவர் ஒருபோதும் எங்களுடன் வரவில்லை. கிராமத்தில் உள்ள மக்கள் அவரைத் தவிர்ப்பார்கள்,” என்று குமார் கூறினார்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தின் தொலைக்காட்சி காட்சிகளைப் பற்றி குறிப்பிடுகையில், "அவர் (லாக்பீர்) நிஹாங்கின் மத உடையை அணிந்ததில்லை. அவரது உடலில் காணப்பட்ட ஆடைகளை அவர் எவ்வாறு பெற்றார்? என்று லாக்பீரின் மைத்துனர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment