Advertisment

“என் மீது வழக்கு போட வேண்டும் என்ற அழுத்தமே சிபிஐ அதிகாரியை தற்கொலைக்கு தூண்டியது”- மணீஷ் சிசோடியா

நான் பிரதமர் நரேந்திர மோடியின் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன். என் மீது பொய் வழக்கு பதிய வேண்டும் என்ற வற்புறுத்தலே சிபிஐ அதிகாரியின் மரணத்துக்கு காரணம் என டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சி்சோடியா குற்றஞ்சாட்டினார்.

author-image
WebDesk
New Update
Sisodia tears into Modi

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவும் தனியார் நிறுவனங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பல நூறு கோடி ரூபாய் கமிசன் பெற்றுள்ளதாக பாஜக ஸ்டிங் வீடியோவை வெளியிட்டது.

Advertisment

இது நடந்த சில மணி நேரங்களில், மத்திய அரசை சிசோடியா கிழித்தெறிந்தார். இது குறித்து சிசோடியா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிபிஐயில் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய சட்ட அதிகாரி் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது பெயர் ஜிரேந்திர குமார். என் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, என்னைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதை நாங்கள் கண்டறிந்தோம்.

இதை அவர் அனுமதிக்கவில்லை. மேலும் அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதால், அவர் தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வருத்தமளிக்கிறது.

ஒரு பொய் வழக்கை சட்டப்பூர்வமாக நிரூபிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவறு. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.

நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைக்க விரும்புகிறேன் - நீங்கள் என்னை தவறான வழக்கில் சிக்க வைக்க விரும்பினால், அதைச் செய்யுங்கள். நீங்கள் என்னை ரெய்டு செய்ய விரும்பினீர்கள், அதை செய்தீர்கள்.

என் மீது பொய் வழக்கு போட்டீர்கள். நீங்கள் என்னை கைது செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் எங்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள், நான் அங்கே இருப்பேன். தயவு செய்து அதிகாரிகளை வற்புறுத்தி அவர்களை தற்கொலைக்கு இட்டுச் செல்ல வேண்டாம்,'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், இது குடும்பங்களை அழிக்கிறது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை யார் மீது பயன்படுத்தலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை எப்படிக் கவிழ்க்கலாம், எம்எல்ஏக்களை எவ்வாறு விலைக்கு வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

பள்ளிகளை கட்டுவது பற்றி எப்போது யோசிப்பீர்கள்? மருத்துவமனைகள் கட்டுவது குறித்து சிந்திப்பது குறித்து எப்போது சிந்திப்பீர்கள்? பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவது பற்றி, வேலை வாய்ப்புகள் உருவாக்கவது பற்றி? எப்போது சிந்திப்பீர்கள்.

அந்த வகையில், ஜிதேந்திர குமாரின் தற்கொலை குறித்து பிரதமரிடம் நான் 3 கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன் – அதிகாரிகள் மீது ஏன் இவ்வளவு அழுத்தம், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளத் தள்ளப்படுகிறார்கள், உங்கள் சொந்த அதிகாரிகளை எந்த அளவுக்குச் சித்திரவதை செய்வீர்கள்? ‘ஆபரேஷன் தாமரை’ நடத்துவது மட்டுமே மத்திய அரசின் வேலை; எதிர்க்கட்சி அரசாங்கங்களை நசுக்க இன்னும் எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டும்?

“இது மிகவும் வருத்தமான சம்பவம். அதிகாரிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது ஒருபோதும் இயல்பாக நடக்கவில்லை, ”என்றார்.

தொடர்ந்து, பாஜகவின் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ குறித்த கேள்விக்கு சிசோடியா, “மோசடி நடப்பதாக பாஜக கூறி வருகிறது, ரூ.30 கோடி, ரூ.144 கோடி, ரூ.1,300 கோடி என எண்களை மேற்கோள் காட்டி வருகிறது.

பின்னர் அவர்கள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகளை வற்புறுத்தினர். அதில் இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான வெள்ளை ஒப்பந்தங்களுக்கு என்னை இழுக்க முயன்றனர்.

அதுவும் குற்றஞ்சாட்டுகளின் அடிப்படையில்தான். எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. என் லாக்கரைத் தேடினர்; அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

சிபிஐ எனக்கு க்ளீன் சிட் வழங்கியும், எனக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என காரில் சென்றவரை பிடித்து பாஜகவினர் ஏதேதே பேசியுள்ளனர். இது நல்ல நகைச்சுவை” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aap India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment