டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில், தொடர்ந்து 4 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு ஒன்றில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் இருந்த மற்ற சில நபர்கள் சோஃபாவில் அமர்ந்தப்படி டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்திலியே வைரலானது. இதுக் குறித்து ஆராய்ந்த போது தான் கெஜ்ரிவால் , டெல்லி துணை நிலை ஆளுநரின் வரவேற்பறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட வந்தது தெரிய வந்தது.
அவருடன் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் டெல்லி அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏன் இந்த உள்ளிருப்பு போராட்க்டம் என்று விசாரித்தால், டெல்லியில் நடைபெற்று வரும் ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் துணைநிலை கவர்னர், அனில் பைஜாலை சந்திக்க கடந்த 11 ஆம் தேதி மாளிகைக்கு நேரில் சென்றுள்ளார்.
ஆனால், கவனரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால், கவர்னர் மாளிகையின் வரவேற்பாளர் அறையில், பல மணி நேரம் காத்திருந்தார். அவருடன், மாநில அமைச்சர்களும் சென்றிருந்தனர். எனினும், கவர்னரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படாததால் , கவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்' எனக் கூறி, கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளார். இந்த போராட்டம் இன்றுடன் 4 ஆவது நாளை எட்டியுள்ளது.
पहले कहा, धरना गलत
फिर खुद करने लगे
पहले कहा, एसी में कोई धरना होता है?
फिर खुद एसी में बैठ गए
पहले कहा, सोफे पर पसर कर मजे कर रहे
फिर खुद करने लगे
पहले कहा, किसी के यहां घुस कर जम जाना कहां की तमीज
फिर खुद घुस बैठे
pic.twitter.com/PLZW6cEU9z— Mukesh Kejariwal (@Mukesh_k) 13 June 2018
இதற்கிடையில், போராட்டத்தில் இருந்தப்படியே கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஏஎஸ் அதிகாரிகள் போராட்டம் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். மேலும், கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதே போல், டெல்லி ராஜ்பாத் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர், மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் விதமாக நேற்றிரவு பேரணி மேற்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.