நீங்க பேசுறது புரியல… இந்தியில் கோஷமிட்டவர்களுக்கு தமிழில் பதிலளித்த கார்த்தி சிதம்பரம்

Sivaganga Congress MP karti chidambaram Lok sabha Speech:

By: Updated: February 10, 2021, 10:16:15 PM

நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய கார்த்தி. சிதம்பரம்  கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி மொழியில் கோஷமிட, ஆத்திரமடைந்த கார்த்தி சிதம்பரம் ‘நீ என்ன சொல்ற, எனக்கு புரியவில்லை’ என்று தெரிவித்தார்.

 

 

கார்த்தி சிதம்பரம் தனது உரையில், “குடியரசுத் தலைவர் செயலகம் அனைவராலும் மதிக்கப்படக் கூடிய ஒன்று. அன்றாட அரசியலுக்கு அப்பால் குடியரசுத் தலைவர்  உள்ளார்.  பேஸ்புக் லைக்ஸ் , ட்விட்டர் ரீட்வீட், கருத்துக் கணிப்பு உள்ளிட்ட எதையும்  அவர் கொண்டு கொள்ளத் தேவையில்லை. தேசத்தின் எண்ண ஓட்டத்தையும், தற்காலிக நிகழ்வையும்    குடியரசுத் தலைவர் உரையில் நாம் எதிர்ப்பார்க்க  வேண்டும்.  இந்தியாவில் மனிதர்கள் பற்றி பேசப் பட வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு எண்ணற்ற இந்தியர்கள் துயரமடைந்தனர்.  கடந்த  வாரம் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில் சொல்லப்பட்டதை விட, சொல்லப்படாததை நினைத்து தான் வருத்தப்படுகிறேன். ஆளுக்கட்சியின் குரலாகத் தான் குடியரசுத் தலைவர் உரை இருந்தது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து ஒரு வார்த்தை கூட உரையில் இடம் பெறவில்லை” என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sivaganga congress mp karti chidambaram stunning reply to presidents address and motion of thanks debate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X