6 மாதத்தில் எதிர்கட்சிகளுக்கு எதிராக நடந்த 15 ஐடி ரெய்டுகள்.. அரசின் நடுநிலை தன்மை என்ன?

கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் என்ற தகவலும் கிடைத்தது.

By: Updated: April 10, 2019, 10:30:23 AM

Aanchal Magazine

IT raids against Opposition : வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாக செயல்படவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரைக்கு காரணம் கடந்த 6 மாதங்களில் எதிர்கட்சி தலைவர்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என 15 இடங்களின் நடந்த ஐடி ரெய்டுகள் தான்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் எதிர்கட்சித் தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கர்நாடகாவில் 5, தமிழ்நாட்டில் 3, ஆந்திராவில் 2, டெல்லியில் 2 , மத்திய பிரதேசம் 1, ஜம்மு காஷ்மீர் 1, உத்தரப்பிரதேசம் 1, இத்துடன் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் பிஜேபி தலைவர் வீட்டிலும் ஐடி ரெய்டு நடப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்பு அதுக் குறித்து விசாரித்ததில் அவர் கட்சியில் இருந்து சமீபத்தில் நீங்கினார் என்ற தகவலும் கிடைத்தது.

நேற்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின், இந்தூரிலிலுள்ள முன்னாள் உதவியாளர் பிரவீன் காக்கர் டெல்லியிலுள்ள கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார், கமல்நாத் உதவியாளர் வீடுகளிலும் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைகள் தொடர்ந்தனர்.

அதனைத்தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் மிட்குர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுதாகர் யாதவ் மற்றும் தெலுங்குதேசத் தலைவரும் தொழிலதிபருமான சி.எம்.ரமேஷ் அவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டனர்.

இந்த வருமான வரித்துறை சோதனை பற்றி முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியை எழுப்பி இந்தியன் எக்ஸ்பிரஸ் வருவாய் துறைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அதற்கு இப்போது வரை பதில் வரவில்லை.

கடந்த மார்ச் 29 ஆம் தேதி வேலூர் காட்பாடியில் உள்ள தி.மு.க பொருளாளர் துரை முருகன் இல்லம் மற்றும் கல்லூரி அவரது மகனின் பள்ளி மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் 27 மற்றும் 28 தேதிகளில் கர்நாடக மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியின் உதவியாளர் வீடு, பொதுப் பணித்துறை அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் நண்பர்கள்,நீர்பாசன துறை அமைச்சர் சி.எஸ்.புட்டராஜூ வீடு ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

அதே போல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கைலாஷ் காஹ்லோட் மற்றும் நரேஷ் பாலன் ஆகியோரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் மாயாவதியின் முன்னாள் செயலாளர் நெட் ராம் வீட்டில் நடந்த ஐடி ரெட்ய்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.

வருமான வரித்துறையினரின் இந்த சோதனையை அமைச்சர்கள் உட்பட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர். வருமான வரித்துறையின் சோதனைக் குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 28 ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் “ வருமான வரிச்சோதனையின் மூலம் உண்மையான சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மோடி திறந்துவிட்டுள்ளார். மோடியின் பழிவாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு கர்நாடக வருமானத் துறைத் தலைவர் பாலகிருஷ்ணாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை சங்கடப்படுத்த ஊழல் அதிகாரிகள் பயன்படுகின்றனர்” என்றார்.

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதுமட்டுமில்லை தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டை எதிர்த்து தர்ணாவிலும் ஈடுப்பட்டார்.

கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினரின் அதிக அழுத்தம் மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் பக்கம் திரும்பியுள்ளது. இதுக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்ட், “ பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம். என் அரசியல் பணியை நான் மேலும் தொடர்வேன்” என்றார்.

கடந்த சில ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் 2016 – 17 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 2,126 வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு அதில் 89 பேருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பிப்ரவரி 2018 ஆண்டு வரை கணக்கிட்டு பார்த்தால் 2016 ஆண்டில் 447 சோதனைகள், 2017 ஆம் ஆண்டில் 1,152 ரெய்டுகள், 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை 527 சோதனைகள். இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது 2016 ல் 28 பேர், 17 – ல் 16 பேர், 2018 – ல் 45 பேர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the India News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Six months fifteen raids against opposition what govt calls neutral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X