இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இன்று புதன்கிழமை குறைந்தது ஆறு விமானங்களுக்காவது (3 இண்டிகோ, 2 ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஒரு ஆகாசா ஏர்) வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த மூன்று நாட்களில் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கள்கிழமை மூன்று சர்வதேச விமானங்களுக்கு (ஒரு ஏர் இந்தியா மற்றும் 2 இண்டிகோ) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று செவ்வாய்கிழமை மேலும் ஒன்பது விமானங்கள் அச்சுறுத்தல்களைப் பெற்றன. இந்த அனைத்து வெடிகுண்டு மிரட்டல்களும் சமூக வலைதளங்கள் வழியாக விடுக்கப்பட்டுள்ளன. இறுதியில் அவை போலியானது என்றும் கண்டறியப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Six more flights of Indian carriers receive bomb threats; 18 threats in three days
இதற்கிடையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சகங்கள், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட பல ஏஜென்சிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் போலி வெடிகுண்டு மிரட்டல்களில் ஈடுபடுபவர்களை விமானப் பயணத் தடை பட்டியலில் சேர்க்கும் முந்தைய திட்டத்தை முறைப்படுத்த, சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகத்துடன் (பி.சி.ஏ.எஸ்) நெருக்கமாகப் பணிபுரிகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளும், காவல்துறையினரும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து, அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடித்துப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசரகால பதிலளிப்பு பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்த விமானங்களில் ஆகாசா ஏரின் டெல்லி-பெங்களூரு விமானம், இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் மற்றும் மூன்று இண்டிகோ விமானங்கள் - ரியாத்-மும்பை, மும்பை-சிங்கப்பூர் மற்றும் சென்னை-லக்னோ ஆகியவை அடங்கும். ஆகாசா ஏர் விமானம் டெல்லிக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், இண்டிகோவின் ரியாத்-மும்பை விமானம் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டது. மற்ற இரண்டு இண்டிகோ விமானங்கள் அந்தந்த இடங்களுக்கு வந்திறங்கியது, அங்கு விமானம், பயணிகள் மற்றும் சாமான்கள் நெறிமுறையின்படி கட்டாய பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
ஆகாசா ஏர் விமானத்தை இயக்கும் விமானம் - QP 1335 - மதியம் 12.16 மணிக்கு டெல்லி புறப்பட்டு, விமானத்தின் கண்காணிப்பு தரவுகளின்படி, விமானத்தில் ஒரு மணி நேரத்திற்குள் பொது அவசரநிலையை அறிவித்தது. போயிங் 737 விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டு மதியம் 2 மணியளவில் தரையிறங்கியது. விமான நிறுவனம், அறிக்கை மூலம், கேப்டன் தேவையான அனைத்து அவசர நடைமுறைகளையும் பின்பற்றி, விமானத்தை டெல்லிக்குத் திருப்பி, மதியம் 1.48 மணிக்கு இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“