உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட ராமர்பாதையில் பல இடங்களில் சாலை பள்ளங்கள், தண்ணீர் தேங்குவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் உத்தரப் பிரதேச பொதுப்பணித் துறை (PWD) மற்றும் ஜல் நிகாம் துறைச் சேர்ந்த 6 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பொதுப் பணித் துறையின் துருவ் அகர்வால் (செயல் பொறியாளர்), அனுஜ் தேஷ்வால் (உதவி பொறியாளர்), பிரபாத் பாண்டே (ஜூனியர் இன்ஜினியர்), ஆனந்த் குமார் துபே (செயல் பொறியாளர்), ராஜேந்திர குமார் யாதவ் (உதவி பொறியாளர்) மற்றும் ஜல் நிகாமின் ஜூனியர் இன்ஜினியர் முகமது ஷாஹித் ஆகிய 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க: Six officials suspended over waterlogging, cave-ins in Ayodhya
அண்மையில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நகரத்தில் பெரும் விளம்பரப்படுத்தப்பட்டது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட ராமர்பாதையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பள்ளங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோவிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி 22-ம் தேதி திறந்து வைத்தார்.
ராமர்பாதை மட்டுமின்றி, புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், தண்ணீர் தேங்கியுள்ளதை கற்றவும் மாநில அரசு அதிகாரிகளை நியமித்துள்ளது. இருப்பினும், அயோத்தியில் பருவமழை தொடங்கி அயோத்தியில் வசிப்பவர்களின் பிரச்சினைகளை மோசமாக்குகிறது. ஜனவரியில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு வரும் முதல் பருவமழை இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“