Advertisment

விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் வேளாண் பிரிவு; எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட நிபுணர்கள் மீதும் தாக்கு

எம்.எஸ் சுவாமிநாதன் முதல் தற்போதை நிபுணர்கள் வரை அனைவராலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்; போராட்டம் நடத்துபவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துக் கூடாது; ஆர்.எஸ்.எஸ் விவசாயப் பிரிவு தீர்மானம் நிறைவேற்றம்

author-image
WebDesk
New Update
farmer protest tear gas

இந்த மாத தொடக்கத்தில் பஞ்சாபில் உள்ள கானுரி-தத்தா சிங் வாலா எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தினர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - ஜஸ்பிர் மல்ஹி)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Deeptiman Tiwary 

Advertisment

பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள், பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கம் (BKS) விவசாய நிபுணர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்என்று கூறியுள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: Slamming farm protesters, RSS wing targets Bharat Ratna Swaminathan, other agri experts over tech pitch

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை நான்கு சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசிடம், “போராட்டத்தின் வன்முறை தன்மை காரணமாக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம்என்று BKS கேட்டுக் கொண்டுள்ளது.

பிப்ரவரி 23 முதல் 25 வரை ராஜஸ்தானின் கிஷன்கஞ்சில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் BKS இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.

விவசாயிக்கு ஏற்கனவே பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் விவசாய வல்லுநர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் ஊக்குவிக்கப்பட்ட வழிகளைப் பின்பற்றுவதால், அவர்களின் இடுபொருள் செலவுகள் விகிதாசாரமாக அதிகரித்து வருகின்றன, மேலும் அவர்களின் பயிர்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை" என்று BKS தீர்மானம் கூறுகிறது.

BKS அகில் பாரதிய மகாமந்திரி மோகினி மோகன் மிஸ்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த "நிபுணர்கள்" என்று அழைக்கப்படுபவர்களில் புகழ்பெற்ற விவசாய விஞ்ஞானியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் முதல் "தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட விவசாயத்தை வலியுறுத்தும் இன்றைய நிபுணர்கள்" வரை அனைவரும் அடங்குவர் என்று கூறினார்.

"அவர்கள் அனைவரும் தொழில்நுட்பத்தில் அதிக அழுத்தத்தை கொடுத்துள்ளனர். இதனால் விவசாயிகளின் இடுபொருள் செலவு அதிகரித்துள்ளது. ஆனால், உணவுப் பொருட்களின் விலை அதே அளவு உயரவில்லை. டிராக்டர்கள் எரிபொருளை உறிஞ்சுகின்றன. விவசாயிகள் காளை மாடுகளைப் பயன்படுத்தினர், மேலும் சுற்றுச்சூழல் அமைப்பில் பால் மற்றும் சாணம் கொடுக்கும் பசுக்கள் இருந்தன,” என்று மோகன் மிஸ்ரா கூறினார்.

BKS தனது தீர்மானத்தில், கல்வி, ஆராய்ச்சி, வணிகம் மற்றும் விவசாயம் சார்ந்த விளம்பரங்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே விவசாயிகளைத் தவிர்த்து கோடீஸ்வரர்களாகிவிட்டனர் என்றும் கூறியுள்ளது.

நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு அதன் எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தி, BKS தீர்மானம் வன்முறை போராட்டத்தை ”சகித்துக் கொள்ளக் கூடாது” என்று அழைப்பு விடுத்துள்ளது.

"ஒரு வன்முறை இயக்கம் ஒருபோதும் தேசத்தின் நலனுக்காக இல்லை... அரசுகள் இத்தகைய வன்முறை கிளர்ச்சியாளர்களுடன் ஈடுபடும் போது, ​​இயக்கம் மேலும் வன்முறையாக இருக்க உத்வேகம் பெறுகிறது" என்று தீர்மானம் கூறுகிறது.

இடுபொருள் செலவு, விவசாய இடுபொருட்கள் மீதான ஜி.எஸ்.டி ரத்து, கிசான் சம்மன் நிதி உயர்வு, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வலியுறுத்தி வரும் மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்களை நிராகரித்தல், விதைகள் மீதான விவசாயிகளின் உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் சந்தையில் விவசாயிகளின் சுரண்டலுக்கு முடிவு கட்டுதல், விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

BKS, சிறுதானியங்கள் பற்றிய மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றியது, தகுந்த காலநிலை காரணமாக சிறுதானியங்கள் இந்தியாவில் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது என்று தீர்மானம் கூறுகிறது. இருப்பினும், பயிரின் சந்தைப்படுத்தல் தொடர்பான சிக்கல்களை தீர்மானம் எடுத்துரைத்துள்ளது.

சிறுதானியங்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு, விவசாயிகள் அதன் விவசாயத்தின் மீது அதிகளவில் ஈர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், அமைப்பில் சில அடிப்படை குறைபாடுகள் உள்ளன. முக்கிய பிரச்சினை என்னவென்றால், நிலையான விநியோக அமைப்பு இல்லை. மக்களுக்கும் சந்தைக்கும் இடையே தேவை இருந்தாலும், தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இது இல்லாத பட்சத்தில், பயிர் பல்வகைப்படுத்துதலால் விவசாயி ஏமாற்றமடைந்து மீண்டும் அரிசி மற்றும் கோதுமை விவசாயத்திற்குச் செல்லலாம்," என்று தீர்மானம் கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment