Advertisment

வெளியுறவுத் துறை அமைச்சராக சொற்களை விட சாதனைகள் மூலம் பதிலளித்தவர் எஸ்.எம் கிருஷ்ணா!

எஸ்.எம் கிருஷ்ணா வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த போது, தனது சொற்களை விட சாதனைகள் மூலம் பதிலளித்தவர். அவரது பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தன.

author-image
WebDesk
New Update
SMK

ஜூன் 2009 மற்றும் அக்டோபர் 2012 வரை வெளியுறவுத்துறை அமைச்சராக எஸ் எம் கிருஷ்ணார் அழைத்து வரப்பட்டடார். கர்நாடக முதல்வராக இருந்தபோது பெங்களூரில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கிய பெருமைக்குரிய கிருஷ்ணா, இன்று தனது 92வது வயதில் காலமானார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: S M Krishna, a foreign minister whose record speaks louder than his gaffes

 

Advertisment
Advertisement

“கடந்த 2009-ஆம் ஆண்டில் டென்னிஸ் விளையாடுவதற்காக நான் வெளியே செல்லவிருந்த போது தான், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது” என எஸ்.எம். கிருஷ்ணா கூறியிருந்தார்.

எஸ்.எம். கிருஷ்ணாவின் அமைதியான மற்றும் இணக்கமான பாணியை குறிப்பிட்டு சக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை பாராட்டுவார்கள். குறிப்பாக, மன்மோகன் சிங்குடன் தீவிரமாக கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை அவர் முன்னெடுத்தார். 77 வயதில், அவர் அந்த நேரத்தில் அமைச்சரவையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். ஏறத்தாழ தனது 80-வது வயதுக்குள் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் என்ற அடிப்படையில் 83 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை

மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு, கிருஷ்ணா பாகிஸ்தானுடன் ஈடுபடும் சவாலான பணியை மேற்கொண்டார்.

இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஒரு தவறான தொடக்கத்திற்குப் பிறகு - அப்போதைய பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து - இரு தரப்புக்கும் இடையிலான உரையாடல் செயல்முறையை மீண்டும் தொடங்க வெளியுறவு அமைச்சர், பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றினார்.

இதன் விளைவாக, இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், பூட்டானின் திம்புவில், சார்க்கின் மாநாட்டின் போது சந்தித்து, நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களிலும் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்தனர். கிருஷ்ணா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி காருடன் வலுவான உறவை வளர்த்துக் கொண்டார். அவர் செப்டம்பர் 2012 இல் பாகிஸ்தானுக்குச் சென்று ஷாபாஸ் ஷெரீப்பைச் சந்தித்தார்.

2010 முதல் 2011-ஆம் ஆண்டுகளில் சுமார் 89 உயர் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதைய சூழலில், அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், சீனாவின் வென் ஜியாபோ, ஃப்ரெஞ்சு அதிபர் நிக்கோலஸ், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோர் வருகை தந்தனர்.

நல்லுறவை மேற்கொண்ட எஸ்.எம். கிருஷ்ணா

கிருஷ்ணா, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டனுடன் நல்லுறவை மேற்கொண்டார். சுமார் மூன்று முறை அவருடன் இந்தியா-அமெரிக்க இடையேயான கூட்டங்கள் நடந்துள்ளன. இதேபோல் அமெரிக்காவின் மற்ற அதிகாரிகளுடன் இணக்கமான உறவை கிருஷ்ணா கையாண்டார்.

கிருஷ்ணா தனது ஈரானியப் பிரதிநிதியான மனோச்சேர் மோட்டாகியுடன் வலுவான உறவை வளர்த்துக் கொண்டார், மேலும், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டால் இந்தியா-ஈரான் உறவுகள் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ஆம் ஆண்டில் சில நாடுகளில் இருந்து இந்தியர்களை வெளியே கொண்டு வருவதிலும் வெளியுறவுத்துறை அமைச்சராக கிருஷ்ணா பங்காற்றினார். அந்த சூழலில் சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

வெளிநாடுகளில் சிரமத்தை அனுபவிக்கும் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து கிருஷ்ணா சிறப்பாக கையாண்டார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல்களுக்கு எதிராக அவர் தனது குரலை பதிவு செய்தார்.

எனினும், நாடாளுமன்ற கூட்டங்களின் போது அவர் பதிலளித்த முறை அப்போது சர்ச்சையாக பேசப்பட்டது. ஒருமுறை இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானியர் பற்றிய கேள்வியை அவர் தவறாகப் புரிந்துகொண்டு, அந்த கைதியின் விடுதலையை உறுதிசெய்ய பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்வதாக பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்யசபா, சம்பந்தப்பட்ட நபர் இந்திய சிறையில் இருப்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது.

இதனிடையே, அவர் பெங்களூருவில் இருந்த போது தனது தகவல் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் மூலம், பாஸ்போர்ட் வழங்கப்படுவதை எளிமையாக்கினார். இதற்கான செயல்முறையை அவர் டாட்டா நிறுவனத்திடம் ஒப்படைத்தார். பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், நாடு முழுவதும் பரவியது. 

2012 அக்டோபரில் கிருஷ்ணா பதவி விலகும்படி கேட்கப்பட்டபோது, ​​அவர் அதை சிறப்பாக செய்தார். அப்போது தியாகராஜர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணாவிடம் நேர்காணல் செய்யப்பட்டது. அப்போது, இளைஞர்களின் வருகைக்காக மூத்த குடிமக்கள் வழிவிட வேண்டும் என அவர் கூறினார். மேலும், மத்திய அமைச்சர்களுக்கான வயது வரம்பை நிர்ணயிக்க பரிந்துரைப்பீர்களா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிகளித்த அவர், "என்னைப் பற்றி மட்டுமே நான் பேச முடியும், மற்றவர்கள் குறித்து என்னால் பேச முடியாது" எனக் கூறினார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Krishna Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment