ஷாலினி நாயர்
Smash Brahminical Patriarchy : ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜாக் டோர்சே “பிராமண ஆதிக்கத்தை தகர்ப்போம்” என்ற பதாகையுடன் நிற்கும் புகைப்படம் சில நாட்களாக பயங்கர வைரலாகி வருகிறது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ, ஜாக் டோர்சே மாணவர்கள், அரசியல்வாதிகள், மற்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது பிராமணிய ஆணாதிக்கத்தை தகர்ப்போம் என்று ப்ராஜக்ட் முக்தி என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சங்கபலி அருணா ஒரு பதாகையைக் கொடுத்தார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஊடகவியலாளர் ஆன்னா வெட்டிக்காட். இந்த புகைப்படத்தினைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன.
During Twitter CEO @jack's visit here, he & Twitter's Legal head @vijaya took part in a round table with some of us women journalists, activists, writers & @TwitterIndia's @amritat to discuss the Twitter experience in India. A very insightful, no-words-minced conversation ???? pic.twitter.com/LqtJQEABgV
— Anna MM Vetticad (@annavetticad) 18 November 2018
அந்த பதாகையை வடிவமைத்துக் கொடுத்தவர் அமெரிக்காவை சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜன் என்ற தலித் செயற்பாட்டாளர் ஆவார். இந்த சர்ச்சைகள் குறித்தும் அந்த பதாகையின் வடிவமைப்பு குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்கு சிறப்பு பேட்டி கொடுத்திருக்கிறார் தேன்மொழி சௌந்தரராஜன்.
“Smash Brahminical Patriarchy ” இந்த பதாகை பின்னால் இருக்கும் கதை என்ன ? எப்படி இந்த சிந்தனை உதயமனாது ?
தலித் கலைஞராக, நான் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவே இருக்க விரும்புகின்றேன். அவர்களின் குரலை, பிரச்சனைகளை, கனவுகளை, என்னுடைய கலைப்படைப்பின் மூலம் நான் வெளிப்படுத்தி விடுகிறேன். இந்த பதாகைகளை நானும் அமெரிக்காவை சேர்ந்த மற்றும் ஒரு கலைஞரான ஷ்ரும்மியும் சேர்ந்து உருவாக்கினோம். இந்த பதாகைகைகள் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் “பிராமண ஆணாதிக்கத்தை தகர்ப்போம்” என்று கூறுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது போன்ற செய்தியை அறிவிக்கும் பதாகைகள் மற்றும் கலைவடிவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது ஒன்றும் எதேச்சையாக நடைபெறுவது இல்லை. சமூக நிலையே அதற்கு காரணம். மிக சமீபமாகத் தான் தலித் சமுதாயத்தை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் இது குறித்து மிகவும் விரிவாக, வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிராமணிய ஆணாதிக்கத்தை தகர்ப்போம் என்ற வாக்கியத்திற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதைப்பற்றி தங்களின் கருத்து
பிராமணிய ஆணாதிக்கத்தை தகர்ப்போம் என்ற வாக்கியம் ஒன்றும் புதிதில்லையே. அம்பேத்காரில் இருந்து உமா சக்ரவர்த்தி வரை அனைவரும் கூறிய இந்த வாக்கியத்தினை எல்லாரும் உணர்ந்து கொள்வார்கள். அவற்றை யாரும் செய்திகளாக பார்க்கமாட்டார்கள். தலித் பெண்ணியவாதியாக நான் விரும்புவது சுதந்திரமாக இருப்பது மட்டுமே. நாம் இந்தியாவில் இருக்கும் பாலின பேதம் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த ட்விட்டர் ட்ரோல்கள் அனைத்தும், இந்தியாவில் இருக்கும் கற்பழிப்பு மற்றும் பெண் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்க மறப்பதன் வெளிப்பாடகவே பார்க்க இயலுகிறது. இது போன்ற எதிர்ப்பலைகள் 13 வயது ராஜ லட்சுமியின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து எழுந்திருக்க வேண்டும். இது போன்ற எதிர்ப்பலைகள் சாதியல் காரணமாக தீண்டாமை உணர்வை உணர்ந்து வருபவர்களுக்காக கொடுக்கப்பட்டிருந்தால் இது போன்ற பதாகைகளை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
உங்களின் தோழி சங்கபாலி அருணா ட்விட்டர் மீட்டில் இந்த பதாகை கொடுத்ததை உங்களுக்கு தெரிவித்த போது, இந்த பதாகை மூலம் சர்ச்சை வரும் என்று நீங்கள் உணர்ந்தீர்களா?
இரண்டு வருடங்களாக இந்த பதாகைகளை நாங்கள் உருவாக்கி பல்வேறு மட்டங்களில் இருப்பவர்களுக்கு அளித்து வருகின்றோம். இதை அனைவரும் ரசித்தார்கள். சர்ச்சை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் சாதியல் ரீதியான, பாலியல் ரீதியான பாகுபாடுகளை உலகம் முழுவதும் அறிந்து, இது சர்ச்சையாக மாற காரணம் அந்த பதாகையை ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ வைத்திருப்பது தான்.
முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பகிரப்படும் ட்விட்டர்கள் மற்றும் ட்ரோல்கள் மீண்டும் ஒரு முக்கியமான செய்தியைத் தான் இந்த உலகத்திற்கு கூறுகிறது. இந்தியா ஏன் பெண்களுக்கும், சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள், தலித்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், மற்றும் புத்த மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக இருக்கிறது என்பதைத் தான் இந்த ட்ரோல்கள் வெளிப்படுத்துகின்றன.
ட்விட்டர் தளம் மட்டும் அனைவருக்கும் குரல் கொடுக்கும் வகையிலான ஒரு பிரிவினை உருவாக்கும் என்றால் இங்கு சாதியத்தை உயர்த்தி பிடிக்கும் வன்முறையாளர்கள் அடக்குமுறையை உபயோகிக்க இயலாது. அதற்கு பதிலாகத் தான் அவர்கள் கோபத்தினையும், மறுப்பினையும், ஆதங்கத்தினையும், வெறுப்பினையும் வெளிப்படுத்துகிறார்கள்.
Smash Brahminical Patriarchy பொறித்த ஒரே ஒரு சின்ன பதாகை, தலித் பெண்ணியவாதிகள், இந்தியாவில் நிலவி வரும் சாதிய அடக்குமுறையை வெளிப்படுத்தும் வகையில் கொடுத்ததே எவ்வளவு பெரிய கோபத்தை மக்கள் மனதில் உருவாக்கியிருக்கிறது என்று பாருங்கள்.
MeToo இயக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்களா?
தரனா ப்ரூக், பாலியல் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். கறுப்பின பெண்களும் மற்றும் தலித் பெண்களும் கற்பழிப்பு கலாச்சாரத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது ஒன்றும் தற்செயலாக நடைபெறுவது இல்லை. அதனால் தான் இந்தியாவில் இந்த மீடு இயக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாலியல் தொடர்பான வன்முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக முன்னேறிக் கொண்டு செல்கிறது இந்த மீடூ இயக்கம் என்பது தான் உண்மை. இதனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன். ஆதிவாசி பழங்குடி மக்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் இயக்கமாக மாற வேண்டும்.
பாலின பேதத்தையும் சாதியல் வன்முறைகளையும் எந்த புள்ளி ஒன்றிணைப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்கள்?
சாதியியல் சார்ந்த பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக இருப்பது கூட இந்த பாலின வேறுபாடு தான். இந்தியாவில் மீடூ இயக்கம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் நாம் நிச்சயமாக ஒரு விசயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். சாதியியல் சார்ந்த வன்முறைகளுக்கு பின்னால் நிச்சயம் பாலின பேதங்கள் நிலை கொண்டிருக்கின்றன. தங்ஞ்சம் மனோரமா, ப்ரியங்கா, சுப்ரியா பூத்மாங்கே, கஃபி, டெல்டா மெக்வால், ஆசிஃபா, ஜிஷா என கற்பழித்து கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்களால் வெளியில் வந்து தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை சொல்லக் கூடிய சூழல் இன்று இங்கு நிலவவில்லை. பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதில் இருந்து வெளிவந்து ஒரு முன்மாதிரியாக யாராலும் இருக்க இயலவில்லை என்பது அப்பட்டமான உண்மை. மதுரா போன்ற சர்வைவர்களை நான் அதிகம் மதிக்கின்றேன். அந்த பெண் போன்றவர்களால் தான் இந்திய நீதித்துறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. பன்வாரி தேவியால் தான் இன்று விசாகா கமிட்டி உருவாக காரணமாக அமைந்தது. #LoSha, #DalitWomenFight, #Dontbearapist, and #SmashBrahminicalPatriarchy போன்ற இயக்கங்கள் மூலமாக பெரிய பெரிய சமூக மாற்றங்களை கொண்டு வந்ததை நாம் என்றும் மறக்காமல் இருக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.