மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாதங்களில் நல்ல பாம்பு தனது இன விருத்தியை பெருக்க ஆரம்பிக்கும். அக்காலக்கட்டத்தில் நல்ல பாம்பு சுமார் 29 முதல் 33 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகள் குஞ்சுகளாக பொரிக்கும்.
Advertisment
இந்த நிலையில், சென்ற ஆண்டு கடலூர் மாவட்டத்தில் 400 இருக்கும் மேற்பட்ட நல்ல குஞ்சுகள் குட்டிகள் கைப்பற்றி வேறு இடத்திற்கு சென்று விடப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு நல்ல பாம்பு குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்ய துவங்கியுள்ளது.
இது குறித்து கடலூர் செல்லா பாம்பு பிடிப்பவர் கூறியதாவது. கடலூர் மாவட்டத்தில் நல்ல பாம்பு முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் செயலை தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதி முதல் செப்டம்பர் இறுதி வரை குஞ்சுகளை பிடிக்கும் பணி நான் ஆரம்பிப்பேன். எனக்கு பொதுமக்களிடமிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன.
நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் மூன்று இடத்தில் பாம்பு குட்டிகளை கைப்பற்றி உள்ளேன். செப்டம்பர் இறுதிக்குள் சுமாராக 400 பாம்பு குட்டிகள் பிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
பொதுமக்களிடம் இருந்து எனக்கு போன் கால் வந்து கொண்டே இருக்கும் என தெரிவித்தார். மேலும் இங்கு பிடிக்கும் பாம்பு குட்டிகள் சும்மா ரெண்டு கிலோமீட்டர் அப்பால் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுவிடுகிறோம்” என்றார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் அவர் பாம்பு பிடிப்பதை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுகின்றனர். இதனால் கடலூர் செல்லா பாம்பு பிடிக்கும் நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“