ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்துக்கு இன்று வரை எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவரும், போதும் போதும் எனும் அளவிற்கு விளக்கம் கொடுத்த பிறகும், எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. வைரமுத்துவுக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்து அமைப்புகள் ஒருபக்கம் வைரமுத்துவை எதிர்க்க, சமீபத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து பேசுவதாக இளம் பெண் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், மிக ஆபாசமாக அந்த இளம் பெண் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல், வேறு சில சிறுமிகளும் வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சித்தனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கர்நாடக டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு ஆபாச வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வயதுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. அந்த வீடியோக்களை பார்த்தவுடன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த புகார் கடிதத்தை எழுதியுள்ளேன்.
மேலும், முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இதுபோன்று பேச முடியுமா? என்று கேட்டு, மத பிரச்சனைகளை தூண்டுகின்றனர். இதுகுறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று மானுஷ் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாளை தான் சிறுமைப்படுத்துவேனா? என்னை தமிழ் சமூகம் சந்தேகப்படலாமா? செய்யாத தப்புக்காக, இல்லாத சொல்லுக்காக பொல்லாத பழியேற்றுள்ளேன்" என்று வைரமுத்து சமீபத்தில் உருக்கமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு ????????
— Prasanna (@Prasanna_actor) 21 January 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.