சமூக வலைதளங்கள் வழியாக தவறான கருத்துகளை பகிராதீர்கள். பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய தொகுதியான வாரணாசியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்களுடன் காணொளி காட்சி வழியாக உரையாடினார். அப்போது எக்காரணம் கொண்டும் சமூக வலை தளங்களில் தேவையற்ற கருத்துகளையோ வெறுப்பினையோ பகிரக்கூடாது என்று கூறினார்.
சமூக வலைதளங்கள் குறித்து மோடியின் கருத்து
“மேலும் தவறான செய்திகள் மற்றும் வதந்திகள் ஒரு நாட்டின் சாபக்கேடு. சில நேரங்களில் தங்களுக்கு வரும் செய்திகள் சரியா தவறா என்று சிறுதும் கூட சிந்திக்காமல் அப்படியே மற்றவர்களுடன் பகிர்ந்து விடுகிறார்கள்.
இச்செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதனால் சமூகத்திற்கு என்ன தீங்கிழைக்கிறார்கள் என்று அவர்கள் அறிவதில்லை. பெண்கள் பற்றி எதை வேண்டுமானாலும் பகிர்கிறார்கள்” என்று தன்னிடம் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் கூறினார் மோடி.
இது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமான செய்தியோ அறிவுரையோ இல்லை. இது இந்த நாட்டில் இருக்கும் 125 கோடி மக்களிடம் சென்று சேர வேண்டிய தகவல் ஆகும். தேவையற்ற கருத்துகளை பகிர்வதை நிறுத்துவது நலம் என்றும் கூறியிருக்கிறார்.
அந்த காணொளியில், இந்தியாவில் இருக்கும் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி, பள்ளிகள், மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளன. மேலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் விதத்தில் இந்தியா வளர்ந்து வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.