/tamil-ie/media/media_files/uploads/2019/08/j-and-k-1.jpg)
kashmir issue solution,kashmir history,kashmir conflict summary, kashmir india, why is kashmir important to india, காஷ்மீர், 370 பிரிவு, விஜயகுமார் ஐபிஎஸ்,causes of kashmir conflict, kashmir conflict essay, kashmir definition, vijay kumar ips
சுபஜித்ராய், தீப்திமான் திவாரி
Vijayakumar IPS Interview: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் 5 நாட்களாக அடைக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரில் சில நாட்களில் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதித்து நிலைமையை தளர்த்தப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகரும், முன்னாள் சி.ஆர்.பி.எஃப் தலைவருமான கே.விஜயகுமார்ம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறிது தளர்வு இருக்கும் என்றும், பக்ரீத் பண்டிகை பாதுகாப்பு தளர்வு குறித்து ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
விஜயகுமாருடனான நேர்காணலின் ஒரு பகுதி:
காஷ்மீர் பள்ளத்தாக்கு பாதுகாப்பு படையினால் பூட்டப்பட்டு 5 நாள் ஆகிறது. அங்கே ஏதேனும் மக்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த சம்பவங்கள் நடந்துள்ளதா? பாதுகாப்பு அதிகாரிகள் எப்படி தடை உத்தரவுகளை அமல்படுத்துகிறார்கள்?
பெரிய அளவில் போராட்டங்கள் எதுவும் இல்லை. ஸ்ரீநகர் சிட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் கல்வீச்சு போன்ற சில சம்பங்கள் நடைபெற்றன. அவைகளும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பாதுகாப்பு படையினர் குறைந்தபட்ச சக்தியைக் கொண்டும் அதிகபட்ச இரக்கத்துடனும் நெகிழ்வுத் தன்மையுடன் தடை உத்தரவுகளை அமல்படுத்திவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்கும், திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகைக்காகவும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் உத்தரவுகளில் தளர்வு இருக்குமா?
வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சில தளர்வுகள் அனுமதிக்கப்படும். பக்ரீத் பண்டிகையைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும். பொது ஒழுங்கிற்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்யும்போது, நல்ல முறையில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட நாங்கள் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம்.
ஒரு குடும்பத்துக்கு ஏதேனும் அவசர மருத்துவ தேவை ஏற்பட்டால் என்ன செய்வது? தகவல்தொடர்பு, நெட்வொர்க் இல்லாததால் அவர்கள் ஒரு மருத்துவரை அல்லது ஒரு ஆம்புலன்ஸை எப்படி அழைக்க முடியும்?
அனைத்து அவசர மருத்துவ தேவைகளுக்கும் சாத்தியமான வகையில் அனைத்து உதவிகளும், வசதிகளும் வழங்கப்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில், பாதுகாப்புப் படையினர் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி மருத்துவ உதவி தேவைப்படும் மக்களை அழைத்துச் செல்கின்றனர்.
பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் ஏடிஎம்களுக்கு செல்ல முடியவில்லை. மக்கள் எப்படி தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்?
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூடாமல் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகள் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் விநியோகிக்கப்படும்.
பயணம் செய்யும் அனுமதி ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்ததா அல்லது அவை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணிக்க அனுமதிக்கிறதா? இந்த கட்டுபாடுகள் இன்னும் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூடாமல் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவைகள் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் விநியோகிக்கப்படும்.
பயணம் செய்யும் அனுமதி ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்ததா அல்லது அவை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணிக்க அனுமதிக்கிறதா? இந்த கட்டுபாடுகள் இன்னும் எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பாஸ்கள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றன, அவை பகுதி சார்ந்ததும் அல்ல, பாதை சார்ந்ததும் அல்ல. நாங்கள் கூடிய விரைவில் சுதந்திரமான நடமாட்டத்தை மீண்டும் கொண்டுவர விரும்புகிறோம். அது படிப்படியாக செயல்படுத்தப்படும்.
ஒருவர் அங்கே எப்போது தொலைபேசி இணைப்புகள் மீண்டும் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம்?
அத்தியாவசிய சேவைகளுக்கான தொலைபேசி இணைப்புகள் படிப்படியாக மீண்டும் வழங்கப்படும். அவசர காலங்களில் மக்கள் அருகிலுள்ளவர்களை தொடர்புகொள்வதற்கும், அவர்களுக்கு நெருக்கமானவர்களை தொடர்புகொள்வதற்கும் பாதுகாப்பு படையினரை அனுகலாம்.
தங்கள் மாநிலத்திற்கு வெளியே வாழும் காஷ்மீர் மக்கள், காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் தங்கள் குடும்பங்களைப் பற்றிய செய்திகளைப் பெற ஏதாவது வழி இருக்கிறதா?
சிவில் நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. நான் குறிப்பிட்டபடி, பாதுகாப்பு படையினர் முடிந்தவரை அவர்களுடைய சொந்த நெட்வொர்க் மூலம் மக்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வாகன போக்குவரத்து நிலைமை எப்படி இருக்கிறது? நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வீடு திரும்பும் காஷ்மீரிகள், காஷ்மீரின் உட்புறங்களுக்கு பயணிக்க முடியுமா? பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதேனும் போக்குவரத்து வசதிகள் உள்ளதா?
வாகன போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைபெற்று வருகிறது. அங்கெ பயணத்திற்கு முழு தடை இல்லை. பொது போக்குவரத்து நிச்சயமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அது படிப்படியாக மட்டுமே மீண்டும் செயல்படுத்த முடியும்.
ஸ்ரீநகரில் உள்ள ஒரு குடும்பத்தினர் கூறுகையில், ஸ்ரீநகர் நூர் பாக் என்ற இடத்தில் கல்வீச்சு சம்பத்திலிருந்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் துரத்தியதில், அவர்களுடைய மகன் ஜீலம் நதியில் மூழ்கிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு சி.ஆர்.பி.எஃப்-இன் பதில் என்ன?
இந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டு பற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள் அவர்கள் மீதான எந்தவொரு புகாரையும் விசாரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கீழ் உள்ள மிக உயர்ந்த பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூடுதல் செயலாளர் எஸ்.எம்.சஹாய் கூறுகையில், “ஒரு சில நாட்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இதுவரை களத்தில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று கூறினார். ஒரு குழு விவாதத்தின்போது பேசிய சஹாய், தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதற்காக சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இது சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்த அவர், காஷ்மீரில் சிக்கலை உருவாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தபோதிலும், இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரின் ஒருங்கிணைப்பை வரவேற்கும் மக்களின் ஆதரவுடன் நிலைமை மேம்படும் என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.