நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண்கள், எடுத்த சுமார் 110 மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டடிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 400 மாணவர்கள் ஜீரோ உள்பட ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்கள் பெற்று மாணவர்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளது. இதுக்குறித்து தகவலை ஆதரத்துடன் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வு கொண்டு வந்ததன் நோக்கமே தகுதி உள்ள மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் மாறாத கருத்தாக இருந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் எம்பிபிஎஸ் படிப்பதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் மருத்துவம் படிக்க அனுமதி என்ற நோக்கத்துடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது நீட் தேர்வு. ஆனால் அந்த நீட் தேர்வில் ஜீரோ மதிப்பெண் பெற்று தகுதி இல்லாத மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் தரப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளின்படி, சுமார் 400 மாணாக்கர்கள் ஒற்றை எண் மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்கள். குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் கட் ஆப் மதிப்பெண்கள் பெறவில்லை. மேலும், சுமார் 110 மாணவர்கள் நீட் தேர்வில் சுழியம் மதிப்பெண்களும், நெகட்டிவ் மார்க்குகளும் பெற்றுள்ளார்கள்.
மருத்துவ படிப்பிற்கான அறிவிப்பின்படி, இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மருத்துவம் படிப்பதற்கான தகுதி இல்லாத 110 மாணவர்களுக்கு சில தனியார் மருத்துவக்கல்லூரிகள் மருத்துவப்படிப்பதற்கு சீட் கொடுத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/07/2.png)
கடந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, நீட் தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் குறித்த முழுமையான விபரங்களின்படி, 1,990 மாணவர்கள் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு வெறும் 150 மதிப்பெண்கள், அதற்கு கீழ் வாங்கியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது
தற்போது இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த தகவல்கள் மாணவர்கள் உட்பட, பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.