தெலங்கானாவில் 48 வயது பெண்ணை அவரது மருமகன் மதுபோதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக சனிக்கிழமை போலீசார் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் 34 வயது ஆண் ஒருவர் நேற்று அவருடைய மாமியார் அறைக்குள் நுழைந்து அங்கே தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
விசாரணையில், அந்தப் பெண் கடந்த இரண்டு வருடங்களாக மகள் மற்றும் மருகன் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவரது மகள் வேலைக்காக வெளியே சென்றிந்த நேரத்தில், அவரது மருமகன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலிசார் அந்த நபரின் மீது இந்திய தண்டனை சட்டம் 376ன் படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த நபர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெலங்கானா காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் ஓயாத நிலையில், தெலங்கானாவில் மதுபோதையில் இருந்த மருமகன் மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Son in law rape mother in law in telangana