Advertisment

சோனாலி போகத் மரணம்: போதைப் பொருள் வியாபாரி கைது

சோனாலி போகத் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் உதவியாளர்கள் இருவரும் 10 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Sonali Phogat death

சோனாலி போகத்

ஹரியானா பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத் மரணத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 42 வயதான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கொலையில் போகத்தின் உதவியாளர்கள் கதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

சோனாலியின் மரணத்தை விசாரித்துவரும் காவலர்கள் சோனாலிக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். இந்தப் போதைப் பொருள்கள் அவருக்கு உணவில் கலந்துகொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சோனாலி கொலையில் கைதுசெய்யப்பட்ட சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் இன்று மதியம் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவுருக்கும் 10 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சோனாலிக்கு போதைப் பொருளை கலந்து வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர் என்றனர்.

சோனாலி ஆகஸ்ட் 22ஆம் தேதி கோவா சென்றுள்ளார். இந்த நிலையில் மறுதினமே மயங்கிய நிலையில் புனித அந்தோணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. சோனாலியை கொலை செய்யவே கோவா அழைத்து வந்துள்ளனர் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சோனாலியின் முழுமையான உடற்கூராய்வு அறிக்கையையும் போலீசார் எதிர்நோக்குகின்றனர். தற்போதுள்ள அறிக்கையின்படி அவரது உடலில் காயங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் கோவாவில் உணவகம் நடத்திவருகிறார். சோனாலியின் மரணம் பல்வேறு யூகங்களை கிளப்பிவருகிறது. அவரது சொத்தை அபகரிக்க கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Murder Bjp Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment