Advertisment

டெல்லி வன்முறைக்கு பின்னால் சதி; அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் - சோனியா காந்தி ஆவேசம்

வடகிழக்கு டெல்லியில் 20 பேர் உயிரிழந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sonia gandhi, sonia gandhi on delhi violence, சோனியா காந்தி, டெல்லி, டெல்லி வன்முறை, சோனியா காந்தி கண்டனம், delhi violence, delhi news, congress,அமித்ஷ ராஜினாமா செய்ய சோனிய வலியுறுத்தல், congress meeting, sonia gandhi press meet, priyanka gandhi, sonia gandi condemn delhi violence

இருபது பேர் உயிரிழந்த வடகிழக்கு டெல்லி வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

Advertisment

வடகிழக்கு டெல்லியில் 20 பேர் உயிரிழந்த வன்முறைகளுக்கு மத்திய அரசே பொறுப்பு என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் அமைதியை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

வன்முறையைக் கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, “டெல்லி காவல்துறை முடங்கிப்போயுள்ளது. கடந்த 72 மணி நேரத்டில் ஒரு தலைமைக் காவலர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் உள்ளனர். வடகிழக்கு டெல்லியின் தெருக்களில் வன்முறை கட்டற்று தொடர்ந்து நடக்கிறது. டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மத்திய அரசும் உள்துறை அமைச்சருமே பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

“அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு மக்களிடம் செல்ல நிர்வாகத்தை செயல்படுத்தாத டெல்லி அரசுக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதில் சமமான பொறுப்பு உண்டு.

இரு அரசுகளின் கூட்டுத் தோல்விதான் தலைநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று சோனியா காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “அச்சம் மற்றும் வெறுப்பு சூழலை உருவாக்கியதற்காக பாஜக தலைவர்களைத் தாக்கிப் பேசினார். “இந்த வன்முறைக்கு பின்னால் ஒரு சதி உள்ளது. டெல்லி தேர்தல்களின் போதும் நாடு இதைக் கண்டது. பல பாஜக தலைவர்கள் அச்சம் மற்றும் வெறுப்பு சூழ்நிலையை உருவாக்கும் கருத்துக்களைத் தூண்டினர்” என்று சோனியா காந்தி கூறினார்.

இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சோனியா காந்தி ஊடகங்களிடம் பேசினார். இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மீதான எதிர்ப்பைத் தொடர்ந்து, டெல்லியில் தொடர்ச்சியான வன்முறைகள் நடந்துவருவது குறித்து கட்சி ஒரு யுக்தியை உருவாக்க வாய்ப்புள்ளது.

பிரியங்கா காந்தி தனது தாயின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு சில நிமிடங்கள் பேசுகையில், டெல்லியில் வசிக்கும் மக்கள் வன்முறையிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டார். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கூறியது வெட்கக்கேடானது, அரசாங்கம் எதையும் செய்யாதது இன்னும் வெட்கக்கேடானது” என்று பிரியங்கா கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் கருத்துக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அறிக்கையில் “இது துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது” என்றார். “இதுபோன்ற சமயங்களில் அனைத்து கட்சிகளும் சமாதானத்தை பேணுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது மோசமான அரசியல். இந்த வன்முறையை அரசியலாக்குவது தவறு.” என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், “அமித் ஷா எங்கே என்று கேட்கிறார்கள். அவர் நேற்று ஒரு கட்சி கூட்டத்தை நடத்தினார். அங்கே ஒரு காங்கிரஸ் தலைவரும் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சர் காவல்துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், காவல்துறையின் மன உறுதியையும் அதிகப்படுத்தினார். காங்கிரஸின் அறிக்கைகள் காவல்துறையின் மன உறுதியைப் பாதிக்கும்” என்று பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Amit Shah Delhi Sonia Gandhi All India Congress Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment