“ஒற்றுமையாக இருக்க வேண்டும்” – திரிணாமுல் தவிர்த்து இதர எதிர்க் கட்சியினருக்கு சோனியா அழைப்பு

கடந்த சில வாரங்களாக “ஆக்டிவாக” இருக்கும் சோனியா திங்கள் கிழமை அன்று, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு வினாத்தாளில் பெண்கள் மீது வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி குறித்து மக்களவையில் விவாதம் செய்தார்.

Sonia Gandhi reaches out to opposition leaders

Manoj C G 

Sonia Gandhi reaches out to opposition leaders : எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை மிகவும் தீவிரமாக கையாண்டு வரும் செய்தியை கூறும் வகையில் சோனியா காந்தி, என்.சி.பி. தலைவர் ஷரத் பவார் உள்ளிட்ட பல முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை செவ்வாய்கிழமை அன்று சந்தித்தார். கோவா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸை ஓரங்கட்டும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் களம் இறங்கும் நேரத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் – சிறப்பு கட்டுரை

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜீ கோவாவில் இருக்கின்ற அதே நாளில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பாஜகவுக்கு எதிராக முன்னணியை உருவாக்கும் முயற்சிக்கான பேச்சுவார்த்தைகளும் அதே நாளில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பவார் மட்டுமின்றி சி.பி.ஐ.(எம்) கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுகவின் டி. ஆர். பாலு, சிவசேனாவின் தலைவர் சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா போன்றோர்கள் கலந்திருக்க இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சியினருக்கு பேச உரிமை இல்லை; ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது – ராகுல்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியே அழைத்திருந்தாலும் அவர்கள் பங்கேற்றிருக்கமாட்டார்கள். நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒருங்கிணைப்பிற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைத்த போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை என்று மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் கூறினார்.

12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அமளிக்கு தீர்வு காண இந்த கூட்டம் நடைபெற்றது என்று வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் பா.ஜ.க.வை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளை ஒன்றாக வைத்திருக்க கட்சிகள் பாடுபட வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தலைவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டனர் என்றும் அரசியல் வட்ட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டினார் சோனியா காந்தி. கடந்த சில நாட்களாக காங்கிரஸ் தலைமை மிகவும் தீவிரமாக செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வார இறுதியில் அவர் ஜெய்ப்பூருக்கு பயணம் சென்று பேரணி ஒன்றில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் இப்படி போராட்டங்களில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள் கிழமை அன்று, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு வினாத்தாளில் பெண்கள் மீது வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி குறித்து மக்களவையில் விவாதம் செய்தார்.

வங்கதேச விடுதலைப் போரின் 50 ஆண்டு விழாவை குறிக்கும் கட்சி நிகழ்வில் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.

நடைபெற்று முடிந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நேரம் கேட்டுள்ளதாக பவார் கூறியதாக கூறப்படுகிறது. அவரும் கார்கேவும் நாயுடுவை ஒன்றாகச் சந்திக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்வது அவரது கையில் இல்லை என்று நாயுடு ஏற்கனவே பவாரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

நரேந்திர மோடியின் வாரணாசி பயணம் குறித்தும் விவாதம் எழுப்பப்பட்டது. ஆனால் விரிவான விவாதங்கள் நடைபெறவில்லை. வருகின்ற காலத்தில் இது போன்ற பல்வேறு கூட்டங்கள் எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்காக நடைபெறும் என்றும் அதில் பவார் பங்கேற்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்டாயம் புதன்கிழமை அவையில் இருக்குமாறு “விப்” வழங்கப்பட்டது என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருந்தது. முக்கியமான மசோதாக்கள் இன்று விவாதத்திற்கு வர உள்ள காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ஜெயராம் ரமேஷ் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sonia gandhi reaches out to opposition leaders for unity tmc not invited

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com