காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜெய்ப்பூரில் நடைபெற்ற விலைவாசி உயர்வுக்கு எதிரான கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால் அவர் கூட்டத்தில் பேசாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு பதிலாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சிறப்பு உரையாற்றினார். மேடையில் இருந்த சில தலைவர்கள், சோனியா காந்தி பேப்பரில் எதோ எழுதுவதை கவனித்துள்ளனர். அது அவர் பேசப்போவதின் நகல் பேப்பர் என நினைத்தனர். ஆனால், அது இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், சோனியா காந்தி பேசுவது தொடர்பாக யாரும் கூறவில்லை என்றனர்.
இதுதொடர்பாக கட்சி தலைவர் ஒருவர் கூறுகையில், ஆஸ்துமா காரணமாக ஜெய்ப்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சோனியா காந்தி விரும்பவில்லை. ஆனால் அவரது குழந்தைகள் மற்றும் சில தலைவர்கள் வற்புறுத்தலின் பேரில், நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். முக்கியமான கூட்டத்தில் அவர் இல்லாதது பலருக்கு தவறான மெசேஜ்ஜை கொண்டு சேர்க்கும்" என்றார்.
பிபின் ராவத்துக்கு பூட்டான் அரசர் மரியாதை
பூட்டானின் அரசர் ஜிக்மே கேசர் நம்க்யால் வாங்சுக் மற்றும் அவரது தந்தை, நான்காவது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோர், திம்புவில் உள்ள புத்த மடாலயத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகாவுக்காக, ஆயிரம் வெண்ணெய் விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
ஜெனரல் ராவத் 1970 களின் முற்பகுதியில் ஒரு மாணவராக பூட்டானுக்கு சென்றது உட்பட பல முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக, ராணுவத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு 2017 ஏப்ரலில் மூன்று நாட்கள் பூடானுக்கு அவர் பயணம் செய்தார்.
கோவாவை கைப்பற்றும் மம்தா?
இரண்டு நாள் பயணமாக கோவா சென்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 1990ல் 18 நாட்கள் முதல்வராக இருந்த மாநிலத்தின் ஒரே NCP எம்எல்ஏ சர்ச்சில் அலேமாவோவின் தொகுதியான பெனாலிமுக்கு சென்றார்.
கடந்த மாதம், மும்பையில் என்சிபி தலைவர் சரத் பவாரை டிஎம்சி மேலிடம் சந்திப்பதற்கு முன்பு, கொல்கத்தாவில் பானர்ஜியை அலெமாவோ சந்தித்தார்
காங்கிரஸில் இருந்த அலெமாவோ மீண்டும் டிஎம்சியில் சேர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் 2014 மக்களவைத் தேர்தலில் டிஎம்சி டிக்கெட்டில் போட்டியிட்டார். அப்போது,தெற்கு கோவா தொகுதியில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.