Advertisment

தன்னுடைய நம்பிக்கை தூணை இழந்தார் சோனியா

படேலின் மரணத்தை கேட்டு துயர் அடைந்தேன். பொது வாழ்க்கையில், சமூகத்திற்கு சேவை செய்ய தன்னுடைய வாழ்நாளை அவர் செலவழித்துள்ளார் - மோடி

author-image
WebDesk
New Update
Ahmed Patel passes away, Ahmed Patel Covid-19, Sonia Gandhi on Ahmed Patel, Ahmed Patel dies, Congress on Ahmed Patel's demise, Coronavirus, Ahmed Patel death reactions, Ahmed Patel obituary, Indian express

 Manoj C G 

Advertisment

Sonia loses her pillar of support, Congress its key link between past and present :  அவர் சுறுசுறுப்பானவரோ அல்லது கவர்ச்சியானவரோ இல்லை. வெகுஜன மக்களுக்கான முறையீடும் அவரிடம் இல்லை. ஆனால் அனைத்து காங்கிரஸ் செயல்பாட்டிற்கும் பின்னால் நின்று செயல்பட்ட மாஸ்டர் மைண்ட் இவர் தான். , பல ஆண்டுகளாக காந்திகளுக்குப் பிறகு காங்கிரசில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த நபர் இவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார், இது ஒரு அரிய குணமாகும், இது காங்கிரசிலோ அல்லது வேறு இடங்களிலோ அத்தகைய அதிகாரத்தின் மற்ற திறன்களிடமிருந்து அவரைப் பிரித்து வைத்திருந்தது.

கோவிட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக இன்று காலை உயிரிழந்தார் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர் அகமது படேல். காங்கிரஸ் கட்சியும் சோனியா காந்தியும் இந்த பழம்பெரும் கட்சியை நடத்த நம்பியிருந்த ஒரு நபர் இவர். பின்னால் இருந்து அனைத்தையும் திறம்பட நடத்திய இவர், நெருக்கடியை சிறப்பாக கையாளும் நபர். அவ்வர் காங்கிரஸ் கட்சியின் சிக்கலான அமைப்பையும் அக்கட்சியில் உள்ள அனைத்து நபர்களையும் அவரது புறங்கையை போன்று நன்கு அறிந்து வைத்தவர்.

புகழின் வெளிச்சத்திற்கு வர விரும்பாத படேலை பலரும் காந்தியின் கேட் கீப்பர் என்று வர்ணிப்பர். இந்த முதன்மை அரசியல்வாதி சோனியா காந்தியின் அரசியல் செயலாளராகவும் நம்பிக்கைக்கு உவந்த தளபதியாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்ந்துள்ளார். சோனியா காந்தி 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க ஆரம்பித்த நாளில் இருந்து அவரை வழி நடத்தி வருகிறார் படேல். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது அரசுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு முக்கியமான இணைப்பாக அவர் விளங்கினார். மேலும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் நபராகவும் அவர் அங்கம் வகித்தார்.

Ahmed Patel passes away, Ahmed Patel Covid-19, Sonia Gandhi on Ahmed Patel, Ahmed Patel dies, Congress on Ahmed Patel's demise, Coronavirus, Ahmed Patel death reactions, Ahmed Patel obituary, Indian express

விசுவாசம் என்ற வார்த்தையை தான் 71 வயதான குஜராத்தை சேர்ந்த இந்த தலைவரை பற்றி பேசும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சி காரர்கள் கூறுகின்றனர். ராகுல் காந்தி மற்றும் அவருடன் நெருக்கமானவர்களுடன் மனஸ்தாபம் கொண்டிருந்தாலும் சோனியாவிற்கு விசுவாசமாகவே அவர் இருந்தார். நம்பிக்கையான சக பணியாளரையும் நண்பரையும் இழந்துவிட்டேன் என்று சோனியா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு படேலின் மரணமானது உன்மையான இழப்பு என்று கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். மற்ற கட்சிகளுடன் இணைப்பை உருவாக்குவதில் சோனியா வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் அதற்கு படேல் தான் காரணம். கட்சி எல்லைகளை தாண்டியும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டினார். அவரால் எந்த ஒரு தலைவரையும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நெருங்க முடியும்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

”அகமது படேல், நான் ஒரு சக கட்சி பணியாளரை இழந்துவிட்டேன், அவரது முழு வாழ்க்கையும் காங்கிரஸ் கட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவரது விசுவாசமும் அர்ப்பணிப்பும், கடமையில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும், உதவியாக இருப்பதும், தாராள மனப்பான்மையும் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திய அரிய குணங்கள். ஈடுசெய்ய முடியாத தோழர், உண்மையான சக ஊழியர் மற்றும் நண்பரை நான் இழந்துவிட்டேன். அவரது மறைவுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன்” என்று தன்னுடைய இரங்கல் செய்தியை அவரின் குடும்பத்திற்கு தெரிவித்தார் சோனியா.

படேல் பல வழிகளில், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையேயான இணைப்பு. கட்சியில் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே பாலமாக அவர் செயல்பட்டார். கட்சி கொந்தளிப்பை எதிர்கொள்ளும் ஒரு நேரத்தில், அவருடைய மரணம் இந்த இரு தரப்பிற்குமான இணைப்பை உடைத்துக் கொள்ள வழி வகுத்துள்ளது என்று நம்புகின்றன. அது ராகுலுக்கு நன்றாகத் தெரியும். "அவர் காங்கிரஸை சுவாசித்தார், கட்சியுடன் மிகவும் கடினமான காலங்களில் உடன் நின்றார்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.

Ahmed Patel passes away, Ahmed Patel Covid-19, Sonia Gandhi on Ahmed Patel, Ahmed Patel dies, Congress on Ahmed Patel's demise, Coronavirus, Ahmed Patel death reactions, Ahmed Patel obituary, Indian express

அவர் கட்சிக்கு மிகப்பெரிய சொத்து என்று ராகுல் கூறினார். “இது ஒரு சோகமான நாள். ஸ்ரீ அகமது படேல் காங்கிரஸ் கட்சியின் தூணாக இருந்தார். அவர் காங்கிரஸை வாழ்ந்து சுவாசித்தார், கட்சியுடன் அதன் மிகக் கடினமான காலங்களில் நின்றார். அவர் ஒரு மிகப்பெரிய சொத்து, ”என்று அவர் கூறினார்.

 

பல்வேறு கட்சியினரும் அண்ணாரின் மறைவிற்கு இரங்கல்களை தெரிவித்துள்ளனர். படேலின் மரணத்தை கேட்டு துயர் அடைந்தேன். பொது வாழ்க்கையில், சமூகத்திற்கு சேவை செய்ய தன்னுடைய வாழ்நாளை அவர் செலவழித்துள்ளார். அவருடைய கூர்மையான அறிவால் பலராலும் அறியப்பட்டவர். அவருடைய இருப்பு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியது. அவருடைய மகன் பைசலிடம் போனில் உரையாடினேன். அகமது படேலின் ஆத்மா சாந்தி அடையட்டட்டும் என்று பிரதமர் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் படேலின் மரணம் குறித்த தகவல்கள் கேட்டு வருத்தமுறுகிறேன். ஒரு புத்திசாலி தனமான பாராளுமன்ற உறுப்பினர். அவரது அன்பான குணம், பல்வேறு கட்சிகளில் இருந்தும் நண்பர்களை பெற்றுத் தந்தது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்கள் என்று ராம்நாத் கோவிந்த் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sonia Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment