Advertisment

காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்கும் சோனியா, ராகுல்… பிரசாந்த் கிஷோர் ரீ என்டரி?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், அவரது இல்லத்திற்கு பிரசாந்த் கிஷோர் வந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திக்கும் சோனியா, ராகுல்… பிரசாந்த் கிஷோர் ரீ என்டரி?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி ராகுல் காந்தியும், இன்று (சனிக்கிழமை) மூத்த கட்சித் தலைவர்கள் குழுவைச் சந்தித்து பேசவுள்ளனர். அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் மற்றும் கட்சி வகுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

Advertisment

இந்நிலையில், தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷோரும், ஜன்பத்தில் உள்ள காந்தியின் இல்லத்தில் உள்ளார்.

மல்லிகார்ஜுன் கார்கே, ஏ கே ஆண்டனி, அஜய் மாக்கன், திக்விஜய சிங், அம்பிகா சோனி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் காந்தி நடத்தும் சந்திப்பில் அவர் பங்கேற்றாரா என்பது தெரியவில்லை.

இக்கூட்டத்தில் ப சிதம்பரம், ரந்தீப் சுர்ஜேவாலாவும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மதியம் வரை அவர்கள் வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தேர்தல் தொடர்பான விவாத சமயத்தில் பிரசாந்த் கிஷோர் இருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. அவரை குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று கட்சியின் ஒரு பிரிவினர் விரும்புவதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, கோடியார் தேவியின் பெரிய கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ கோடல்தாம் அறக்கட்டளையின் தலைவரான நரேஷ் படேல், பிரசாந்த் கிஷோரை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

குஜராத் சட்டசபை தேர்தலில் கட்சியின் முகமாக படேல் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று கிஷோர் விரும்புவதாக கட்சித் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். கடந்த காலங்களில்,, மீண்டும் கட்சியில் சேரலாம் என்ற செய்திகளை கிஷோர் மறுத்திருந்தாலும், தலைவர்களில் ஒரு பகுதியினர் அவரது அத்தியாயம் கட்சியில் முடியவில்லை என்றே தெரிவித்தனர்.

கடந்த ஆண்டும் கிஷோரும் காந்தியும் பல தரப்பு சந்திப்புகளை நடத்தினர். ஆனால் மற்ற கட்சிகளுடனான அவரது தொடர்பு காரணம் காட்டி, நம்பிக்கையின்மை காரணாக அவரது ரி என்டரியை பல தலைவர்களை எதிர்க்க நேர்ந்தது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் பிரசாந்த் கிஷோர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தோல்வியை சந்தித்திருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைமையை ஜனநாயகம் முடிவு செய்யட்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sonia Gandhi Rahul Gandhi Congress Prashant Kishor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment