மும்பையில் சிக்கிய தமிழர்களை வழி அனுப்பி வைத்த சோனு சூட்; ஆரத்தி எடுத்து தமிழ் பெண்கள் நன்றி

ரிசர்வ்ட் டிக்கெட் இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, கழிவறைக்கு அருகே உறங்கி மும்பை வந்தேன். எனக்கு அதன் வலி என்னவென்று நன்றாக தெரியும் - சோனு சூட்

By: Updated: June 6, 2020, 04:37:50 PM

sonu sood helps mumbai tamil migrants : மகாராஷ்ட்ரா மட்டுமில்லாமல் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் சோனுசூட். பஸ்கள் மற்றும் ட்ரெய்னகள் மூலம் பலரையும் தன்னுடைய சொந்த செலவில் அவர்களின் மாநிலங்களுக்கு சோனுசூட் அனுப்பி வைத்தார். இவருடைய இந்த செயல் பலராலும் வரவேற்கப்பட்டது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்காக தன்னுடைய நட்சத்திர ஹோட்டலை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவின் சயான் கோலிவாடா பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனை கோரிக்கையை ஏற்ற சோனு சூட் அவர்களை விமானம் மூலமாக தமிழகம் அனுப்ப முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதற்கு அனுமதி மறக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் மூலம் 180 தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப முயற்சி மேற்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக ஏற்பாடான முதல் பே/ருந்து வடலா டிடி பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டது. நடிகர் சோனு சொஊட் தேங்காய் உடைத்து வழியனுப்ப, தமிழ் பெண்கள் சோனு சூட்டிற்கு ஆரத்தி எடுத்து தங்களின் நன்றிகளை காணிக்கையாக்கினார்கள். அவர்களிடம், பத்திரமாக ஊருக்கு சென்று வாருங்கள் என்று சோனு சூட் கூறி வழி அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்க : தமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு – முதல்வருக்கு உருக்கமான கடிதம்

தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உதவுவது குறித்து பேசிய சோனு சூட், நானும் ஒரு புலம்பெயர் தொழிலாளர் தான். நானும் மும்பைக்கு பெரிய கனவோடு வந்தவன். பசியால் வாடும் நபர்களின் கதைகளை பார்க்கும் போது என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை நியாபகத்திற்கு வருகிறது. நான் மும்பைக்கு ட்ரெய்னில் வந்தேன். ரிசர்வ்ட் டிக்கெட் இல்லாத காரணத்தால் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு, கழிவறைக்கு அருகே உறங்கி மும்பை வந்தேன். எனக்கு அதன் வலி என்னவென்று நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Sonu sood helps mumbai tamil migrants

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X