/tamil-ie/media/media_files/uploads/2020/08/4d9332e8ee57419f2d62facdc1a22217-4.jpg)
Sonu Sood news Sonu Sood real heroism
Sonu Sood says he is not ready to enter politics right now : இந்தியாவில் கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கினால் பல்வேறு விஷயங்களுக்காக மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். போக்குவரத்து வசதி துவங்கி சாப்பிட உணவில்லாமல் தவித்த கொடுமைகள் எல்லாம் அரங்கேறியது. அரசு மட்டுமில்லாமல் தன்னார்வலர்கள் பலரும் தங்கள் இயன்ற உதவியை தேவையானவர்களுக்கு கொடுத்து உதவினார்கள்.
இந்நிலையில் நடிகர் சோனு சூட், சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பலரை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். பேருந்து மட்டுமின்றி பலரையும் தனி விமானம் மூலமாகவும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் அவர். வறுமையில் வாடிய விவசாயிக்கு ட்ராக்டர், குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி கற்க செல்போன்கள், வேலை இழந்தவர்களுக்கு வேலை என்று பல்வேறு உதவிகளை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
மேலும் படிக்க : இந்த மனசு யாருக்கு சார் வரும்? தமிழக மாணவர்களுக்கு உதவிய சோனு சூட்
இந்நிலையில் தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சோனு சூட் பல்வேறு விசயங்களை பகிர்ந்து கொண்டார். அரசியல் வருகை குறித்து அவர் பேசிய போது “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கட்சிகளில் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. உன்னால் ஒரு சிறந்த தலைவராக விளங்கமுடியும் என்று நிறையபேர் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது. நடிப்பில் தான் எனக்கு அதிக ஆர்வம். ஒரே நேரத்தில் இரண்டிலும் கால் வைக்க இயலாது” என்று கூறியுள்ளார்.
ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், என்னுடைய 100% உழைப்பினை என்னை தேர்வு செய்த மக்களுக்காக வழங்குவேன். யாருக்கும் எந்த பிரச்சனையும் இன்றி பாதுகாப்பேன். அதற்கு நிறைய நேரம் தேவை. மேலும் அதற்கு நான் தற்போது தயாராக இல்லை. யாரிடமும் எதற்காகவும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தால் தான் என்னால் இத்தனை உதவிகளை செய்ய இயலுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.