காங்கிரஸ் என்பதையே மறந்து விட்டு மோடிக்கு ஓட்டு கேட்ட சித்தராமையா!!

கர்நாடகாவில்  தேர்தல் பிரச்சாரம் சூடுப்பிடித்துள்ள நிலையில், மோடிக்கு ஓட்டு வாக்களியுங்கள் என்று  கர்நாடகா முதல்வர் சித்தராமையா  கூறியியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் 12 ஆம் தேதி  நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் பரபரப்பாக நடைப்பெற்று வருகிறது . காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி,பிஜேபி  சார்பில் பிரதமர் மோடி ஆகியோர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து மக்களிடம் ஓட்டு சேகரித்து வருகின்றனர். ஆளும் கட்சியான காங்கிரஸ்,  பிஜேபியின் ஆட்சி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த  சூறாவளி பிரச்சாரத்தில் தான்,யாரும் எதிர்ப்பார்க்காத  ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்றைய தினம், பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட  முதல்வர் சித்தராமை வாய் தவறி நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

நரேந்திர சாமிக்கு பதில், நரேந்திர மோடி என்று அவர் கூறியதைக் கேட்டி கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் சிரித்தனர். உடனே தவறை சரிசெய்யும்  விதமாக மேடையிலியே அவர் அதை சமாளித்த விதம் சமூகவலைத்தளக்களில்  கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

பிரச்சாரத்தில் சித்தராமையா பேசியதாவது, “ அனைத்து கிராமங்களிலும் சாலைப்பணிகள், குடிநீர், வீடு கட்டும் பணிகள், அனைத்தும் நமக்கு சாத்தியமானது நம்மாலும் நரேந்திர மோடியாலும் தான்” என்றார்.  உடனேயே வேட்பாளர் நரேந்திர சாமிக்கு தூக்கிவாரிப் போட்டு இடைமறித்துத் திருத்தினார்.

“சாரி சாரி நரேந்திர சாமி முக்கியமான வார்த்தை நரேந்திரா” என்று வழிந்தார்.  உடனே, தவறை சரிசெய்யும் விதமாக மேடையில் வழிந்துக் கொண்டே  “சுவாமி இங்கிருக்கிறார், மோடி குஜராத்தில் இருக்கிறார், நரேந்திர மோடி புனைவு, நரேந்திர சாமி உண்மை” என்று அசட்டுத்தனமாக ஏதோ பேசி சமாளித்தார்.

ஒருபக்கம் முழு வீச்சி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போது, முதல்வர் சித்தராமை மேடையில் இப்படி சொதப்பி இருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

×Close
×Close