special-trains | சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தென் மத்திய ரயில்வே (SCR) அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு இடையே 22 சபரிமலை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளனர்.
இந்தச் சிறப்பு ரயில்களில் முதல் வகுப்பு ஏசி, 2ஏசி, 3ஏசி, ஸ்லீப்பர் மற்றும் பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஆகியவையும் அடங்கும்.
இது குறித்து தென் மத்திய ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ரயில் எண்.07129, செகந்திராபாத் முதல் கொல்லம் வரை நவம்பர் 26ம் தேதியும், டிசம்பர் 3ம் தேதியும் புறப்படும். ரயில் எண்.07130, கொல்லம்-செகந்திராபாத் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 5ம் தேதிகளில் இயக்கப்படும்.
ரயில் எண்.07119, நர்சாபூர்-கோட்டயம் நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ரயில் எண்.07120, கோட்டயம்-நர்சாபூர் நவம்பர் 27 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ரயில் எண்.07123, கச்சேகுடா-கொல்லம் நவம்பர் 22, 29 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ரயில் எண்.07124, கொல்லம்-கச்சிகுடா நவம்பர் 24 டிசம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மேலும் காச்சிகோடாவில் இருந்து கொல்லத்துக்கு நவ.22,29 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 11.55 க்கு சபரிமலை செல்லும்.
ரயில் எண்.07125, காக்கிநாடா டவுன்-கோட்டயம் நவம்பர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். ரயில் எண்.07126, கோட்டயம்-காக்கிநாடா டவுன் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
ரயில் எண்.07127, செகந்திராபாத்-கொல்லம் நவம்பர் 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். அதேபோல், ரயில் எண்.07128, கொல்லம்-செகந்திராபாத் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்” இந்தத் தகவலை தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் சபரிமலை சீசனில் அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“