நரேந்திர மோடி தனது 71 அமைச்சர்களுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9, 2024) மாலை பதவியேற்றார்.
புதிய கூட்டணி அரசில், நரேந்திர மோடியைத் தவிர 30 கேபினட் அமைச்சர்கள், 5 இணை அமைச்சர்கள் (சுயேச்சை பொறுப்பு) மற்றும் 36 இணை அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதாவது, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் எஸ் ஜெய்சங்கர் - மோடி 2.0 அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் - ராஷ்டிரபதி பவனில் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் நரேந்திர மோடி ஆவார்.
விழாவில் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள், நடிகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கேரள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எல். முருகன் ஆகியோர் ஆங்கிலத்தில் உறுதி மொழி மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“