South Korea based SD Biosensor company produces Rapid test kits India : இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கிட்கள் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் அமைந்திருக்கும் மனேசரில் உள்ள ஆலை ஒன்றில் இந்த தயாரிப்பு நடைபெற்று வருகிறது. தென்கொரியாவின் பயோசென்சார் நிறுவனம் இந்த பணியை துவங்கியுள்ளது.
Advertisment
முதற்கட்டமாக வாரத்திற்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் தயாரிக்கப்பட உள்ளது. பிறகு தேவைக்கு ஏற்ப ரேபிட் டெஸ்ட் கிட்களின் உற்பத்தி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ஹரியானாவில் 25 ஆயிரம் கருவிகளை பயன்பாட்டிற்கு கொடுத்துள்ளது அந்த நிறுவனம்.
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் எடுக்கப்பட்ட சோதனைகள் சரியான முறையில் முடிவுகளை அறிவிக்காத நிலையில் அதன் பயன்பாட்டினை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட்களில் கொரோனா பாஸிட்டிவ் காட்டினாலும் பி.சி.ஆர். கிட்கள் மூலமாகவே அதனை உறுதி செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவில் நோய் குறித்து அறிந்து கொள்ள ரேபிட் டெஸ்ட் கிட்கள் வரவழைக்கப்பட்டன என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“