Anjali Marar
Southwest Monsoon 2019 33% deficit in June : தாமதமாக துவங்கிய பருவமழை மற்றும் வாயு புயலின் தாக்கத்தின் காரணமாக எப்போதும் ஜூன் மாதத்தில் பெய்யும் பருவமழையை விட 32.8% பருவமழை குறைவாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த மழைப்பொழிவு குறைவாக இருக்கிறது என்று அறிவித்துள்ள இந்ந்திய வானிலை ஆய்வு மையம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை வலுப்பெறும் என்று உத்திரவாதம் அளித்துள்ளது.
தொடக்கத்தில் சிறிது தொய்வு இருந்தாலும் வரும் நாட்களில் மழை தீவிரமாகும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒடிசா பகுதியீல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 1ம் தேதி அங்கு மழை பெய்யத்துவங்கி படிப்படியாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களில் பருவமழை பரவும் என்று அறிவித்துள்ளது.
இந்த வாரக்கடைசிக்குள் மத்திய, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருவமழை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு, ஜூன் மாதம் 42% பருவமழை குறைவாக பெய்யதது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : mumbai city rain : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்.. கனமழையின் கோரத்தை விவரிக்கும் படங்கள்!
ஜூன் மாதம் 1 வாரம் தாமதமாகவே பருவமழை துவங்கியது. வாயு புயலின் காரணமாக மேலும் ஒரு வாரம் பருவமழை தாமதமானது. 43%மாக இருந்த பருவமழைக்குறைவானது ஜூன் 26ம் தேதியன்று 36%மாக குறைந்தது. மாத இறுதியில் 33%மாக குறைந்துள்ளது.
நான்கு மாத பருவமழை காலங்களில் 18% மழைப்பொழிவை ஜூன் மாதம் பெறுகின்றோம். ஜூலையில் 33% மழையையும், ஆகஸ்டில் 30% மழையையும் நாம் பெருகின்றோம். ஜூலை 4 அல்லது 5 தேதிகளில் பருவமழை டெல்லியை அடையும். துவாரகை, அகமதாபாத், ஜபல்பூர், பெந்தரா, சூல்தான்பூர், முக்தேஸ்வர் ஆகிய இடங்களில் Northern Limit of Monsoon எனப்படும் பருவமழை திங்கள் அன்று துவங்கியது.
எல் நினோவின் தாக்கம் இந்த வருடம் குறைவாகவே இருந்தாலும் அதுவும் பருவமழை தாமதத்திற்கு காரணமாகும். ஆனால் மழைப்பொழிவு குறைவிற்கு முழுக்க முழுக்க எல் நினோவையே காரணம் சொல்லிவிட இயலாது. மகராஷ்ட்ரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் பருவமழை 30 முதல் 60% வரை குறைந்துள்ளது.
வடக்கு கர்நாடகாவின் உட்பகுதி, கொங்கன், கோவா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் மட்டுமே பருவமழை எந்த பிரச்சனையும் இன்றி பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.