தென்மேற்கு பருவ மழை 5 நாட்கள் தாமதமாகும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆனால் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சரியான நேரத்தில் பருவமழை துவங்கும்

Southwest monsoon 2019 IMD forecast

Southwest monsoon 2019 IMD forecast : தென்மேற்கு பருவமழை இந்தியாவில் எப்போதுமே கேரள மாநிலத்தில் இருந்து தான் துவங்கும். சரியாக ஜூன் 1ம் தேதி பருவமழை துவங்கும். கடந்த ஆண்டு கொட்டிய பருவமழை கேரளாவை மீள்கட்டமைப்பிற்கே ஆளாக்கியது. அதனால் தான் இம்முறை மழை என்று பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பு அச்சத்துடனே மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

5 நாட்கள் தாமதமாகும் பருவமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தென்மேற்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக 5 நாட்கள் தாமதமாகவே பெய்யும் என்றும், ஜூன் 6ம் தேதி முதல் பருவமழையை எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது.

2017ம் ஆண்டு இரண்டு நாட்கள் முன்னதாகவே (மே 30) பருவமழை துவங்கிவிட்டது. 2018ல் மே 29ம் தேதி பருவமழை துவங்கியது. இம்முறை ஜூன் 6ல் தான் பருவமழை.

ஆனால் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் சரியான நேரத்தில் பருவமழை துவங்கும் என்றும், அது இந்த வாரத்தின் இறுதியில் இருந்து ஆரம்பமாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : தவிக்கும் தலைநகரம்…! தவிர்க்கும் மழை…!15 வருடங்களில் இல்லாத கடும் வறட்சி

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Southwest monsoon 2019 imd forecast kerala will get monsoon june

Next Story
சர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்Hindu terror remark, delhi high court suspended petition against MNM chief kamalhaasan - சர்ச்சை பேச்சு விவகாரம்: கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி ஐகோர்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com