கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் துவங்கியது பருவமழை
Southwest monsoon : நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழையின் அளவு இயல்பாக இருக்கும் என்றும், இந்த பருவமழையால், 70 சதவீத மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Southwest monsoon : நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழையின் அளவு இயல்பாக இருக்கும் என்றும், இந்த பருவமழையால், 70 சதவீத மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தென்மேற்கு பருவமழை, கேரளாவில், வழக்கம்போல ஜூன் 1ம் தேதி துவங்கியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2013ம் ஆண்டில், இந்த நிகழ்வு நடந்துள்ளது.
Advertisment
இந்தியாவில் பருவமழையின் துவக்கமானது கேரளத்தில் இருந்து தான் துவங்கும். ஜூன் 1ம் தேதியே பருவமழை தொடங்கிவிடுவது வழக்கமான ஒன்றாகும். ஜூன் மாதம் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் ஆகும்.
நடப்பு ஆண்டில், தென்மேற்கு பருவமழையின் அளவு இயல்பாக இருக்கும் என்றும், இந்த பருமழையால், 70 சதவீத மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால சராசரி மழை அளவு 96 முதல் 104 சதவீதம் வரை பதிவாகக்கூடும்.
Advertisment
Advertisements
இந்த பருவமழையால், நாட்டில் மழையளவு 102 சதவீதமாக இருக்கும் என்றும், நீண்ட கால மழையளவு 4 சதவீதம் கூடக்குறைய வாய்ப்பு உள்ளது.
மண்டலவாரியாக, வடமேற்கு இந்தியாவில் 107 சதவீதமும், மத்திய இந்தியாவில் 103 சதவீதமும், தெற்கு தீபகற்பத்தில் 102 சதவீதமும், வடகிழக்கு இந்தியாவில் 96 சதவீதமும் மழை அளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது 8 சதவீதம் கூடக்குறைய வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழையால், நாட்டில் ஜூலை மாதத்தில் 103 சதவீதமும், ஆகஸ்ட் மாதத்தில் 97 சதவீத மழையும் பதிவாக வாய்ப்பு. 9 சதவீதம் கூடக்குறைய வாய்ப்பு உள்ளது. எல் நினோவால் இந்த பருவமழையில் பெரிதும் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில்,தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னோட்டமாக, கடந்த 48 மணிநேரத்தில், மாநிலத்தில் உள்ள 14 மழை கண்காணிப்பு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 70 சதவீத மழை பதிவாகியுள்ளது.
மே 10ம் தேதிக்கு பிறகு, கேரளாவின் மினிக்காய், அமினி திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணூர், காசர்கோடுல மங்களூரு உள்ளிட்ட 14 மழை கண்காணிப்பு மையங்களில், 3 நாட்களுக்கும் மேலாக 2.5 மிமீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil