Advertisment

காங்கிரஸ் மீது சமாஜ்வாதி பாராமுகம்; 2-வது ஆச்சரியமாக 16 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு

உத்தரபிரதேசத்தில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட சமாஜ்வாதி; காங்கிரஸூடன் தொகுதிகளை ஆலோசிக்காமல், 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியீடு

author-image
WebDesk
New Update
akhilesh yadav

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் (கோப்பு படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Lalmani Verma , Asad Rehman

Advertisment

மக்களவைத் தேர்தலுக்காக உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டதாக சமாஜ்வாதி கட்சி (SP) அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அகிலேஷ் யாதவ் தலைமையிலான கட்சி செவ்வாயன்று 16 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த முதல் பெரிய அரசியல் கட்சி என்ற பெருமையை சமாஜ்வாதி கட்சி பெற்றது.

ஆங்கிலத்தில் படிக்க: SP blindsides Congress with second surprise within days, names 16 Lok Sabha candidates

உத்தரபிரதேசத்தின் பல காங்கிரஸ் தலைவர்கள் இது சமாஜ்வாதி கட்சியின் "அழுத்த தந்திரம்" என்று கூறினர், இது தங்கள் கட்சியை சீட் பகிர்வுக்கு ஒப்புக் கொள்ள வைக்கிறது என்றும், தங்கள் தலைமைக்கு தெரிவிக்காமல் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது என்றும் கூறினார். சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் அகிலேஷ் ஏற்கனவே தொகுதிப் பங்கீட்டை "இறுதி செய்துவிட்டார்" என்று வலியுறுத்தினாலும், காங்கிரஸ் இன்னும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறுகிறது.

சமாஜ்வாதி கட்சியின் முதல் 16 வேட்பாளர்களில் யாதவ் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடங்குவர்: அக்ஷய் யாதவ் (ஃபிரோசாபாத்), டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மற்றும் தர்மேந்திர யாதவ் (பதாவுன்). முக்கிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்கள் சம்பல் ஆகும், அங்கு சிட்டிங் எம்.பி ஷபிகுர் ரஹ்மான் பார்க் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்; தௌராஹ்ரா தொகுதியில் ஆனந்த் பதௌரியாவை கட்சி களமிறக்கியுள்ளது; உன்னாவ் தொகுதிக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவர் அனு டாண்டன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்; லக்னோவில், கட்சி எம்.எல்.ஏ ரவிதாஸ் மெஹ்ரோத்ராவுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது; அம்பேத்கர் நகரில் எம்.எல்.ஏ.,வும், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவருமான லால்ஜி வர்மா போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சிக்கு தற்போது மூன்று மக்களவை எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்களில் இருவர் டிம்பிள் யாதவ் மற்றும் ஷபிகுர் ரஹ்மான் பார்க். மூன்றாவது எம்.பி.,யான, மொராதாபாத் எம்.பி எஸ்.டி ஹசன், இந்த முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.

சமாஜ்வாதி கட்சி நடவடிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், “இதில் குறைந்தது நான்கு இடங்களாவது எங்களிடம் வர வேண்டும் என்றும், எங்களிடம் ஆலோசிக்காமல் வேட்பாளர்களை அறிவித்து சமாஜ்வாதி கட்சி எங்களை பாராமுகப்படுத்தியுள்ளது. பா.ஜ.க.,வை தோற்கடிப்பதில் சமாஜ்வாதி கட்சி ஆர்வம் காட்டவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எங்கள் மத்திய தலைமை முடிவு செய்யும்என்று கூறினார்.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்த கேரி, அயோத்தி, லக்னோ மற்றும் ஃபரூக்காபாத் ஆகிய தொகுதிகள் எங்கள் கட்சிக்கு வர வேண்டியவை என்று காங்கிரஸ் நிர்வாகி கூறினார். ஏன் எங்களை இப்படி ஏமாற்றினார்கள் என்று நீங்கள் சமாஜ்வாதி கட்சி தலைமையிடம் கேட்க வேண்டும்,” என்றும் அந்த நிர்வாகி கூறினார்.

இடங்களை அறிவிக்கும் சமாஜ்வாதி கட்சியின் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இது குறித்து மத்திய தலைமைதான் கருத்து தெரிவிக்க வேண்டும்என்று உ.பி பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான அவினாஷ் பாண்டே, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.

தனது கட்சியின் முடிவை ஆதரித்து, சமாஜ்வாதி கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, "யாரும் இருட்டில் வைக்கப்படவில்லை" என்று கூறினார். கட்சியின் வேட்பாளர்கள் தேர்தலுக்கு தயாராவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரிய மனதுடன், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு இடையேயான உறவை மதித்து, அகிலேஷ் ஜி ஏற்கனவே 11 இடங்களை காங்கிரஸ் கட்சிக்கு அளித்துள்ளார். அவர்கள் தங்கள் வேட்பாளர்களையும் அறிவிக்கத் தொடங்கலாம்,” என்று சவுத்ரி கூறினார்.

முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.சி மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் உதவீர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “காங்கிரஸுடன் சீட் பகிர்வு பேச்சுவார்த்தை இன்னும் நடந்து வருகிறது, மாநிலத்தில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை எங்களுக்கு வழங்க முடிந்தால், நாங்கள் அதை அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதற்காக வேட்பாளர் அறிவிப்பை தாமதப்படுத்த முடியாது,” என்று கூறினார்.

பைசாபாத் தலித் வேட்பாளர்

அகிலேஷ் யாதவின் பிச்தா, தலித் மற்றும் அல்ப்சங்க்யாக்அல்லது பி.டி.ஏ மூலோபாயத்தில் கவனம் செலுத்தியபடி, அறிவிக்கப்பட்டவர்களில் 11 தலைவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் (ஓ.பி.சி), மூவர் உயர் சாதியினர், ஒருவர் தலித், ஒருவர் முஸ்லிம்.

11 பேரில் நான்கு குர்மி வேட்பாளர்கள் உள்ளனர்: கெரியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ உத்கர்ஷ் வர்மா, பண்டாவிலிருந்து சிவ சங்கர் சிங் படேல், பஸ்தியிலிருந்து லால்ஜி வர்மா மற்றும் ராம் பிரசாத் சவுத்ரி. சவுத்ரி முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது மகன் கவீந்திர சவுத்ரி கப்தங்கஞ்ச் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. வர்மா BSP இன் குர்மி முகமாக இருந்தார் மற்றும் 2022 இல் UP சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். தற்போது, ​​சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் தனது தொகுதியின் கீழ் வருவதால், பா.ஜ.க.,வுக்கு அதிக வாய்ப்புள்ள இடமான பைசாபாத் தொகுதியில், சமாஜ்வாதி கட்சி தலித் தலைவர் அவதேஷ் பிரசாத்தை நிறுத்தியுள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் போட்டியிட்ட ஃபரூகாபாத் தொகுதியில் நேவல் கிஷோர் ஷக்யாவை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த குர்ஷித் தற்போது காங்கிரஸின் தேசிய கூட்டணியில் உறுப்பினராக உள்ளார், இது கட்சியின் மற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் சீட் பகிர்வு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

2019ல் ஃபரூக்காபாத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி பெற்ற வாக்குகள் பா.ஜ.க.,வை தோற்கடிக்க போதுமானதாக இல்லை. முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களைத் தவிர மூன்றாவது குழுவின் வாக்குகள் நமக்குத் தேவை. எனவே, சமாஜ்வாதி கட்சி அந்த இடத்தை தன்னுடன் வைத்துக்கொண்டு, அங்கு ஒரு ஷக்யா (OBC) வேட்பாளரை நிறுத்தியது,” என்று ஒரு சமாஜ்வாதி கட்சி தலைவர் கூறினார்.

இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, வாரணாசி மற்றும் மிர்சாபூர் மக்களவை தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அறிவித்தது, கட்சி இந்தத் தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருகிறது. வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி. வாரணாசியில் போட்டியிட காங்கிரஸ் அதிக ஆர்வம் காட்டவில்லை. எனவே, அங்கு போட்டியிட சமாஜ்வாதி கட்சி தயாராகி வருகிறது. வாரணாசியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பினால், அதற்கு அந்த இடம் வழங்கப்படும்என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்கள் கோரக்பூர் (போஜ்புரி நடிகர் காஜல் நிஷாத்); பண்டா (சிவ்சங்கர் சிங் படேல்); ஃபருகாபாத் (நேவல் கிஷோர் ஷக்யா); கெரி (உத்கர்ஷ் வர்மா); பைசாபாத் (அவதேஷ் பிரசாத்), பஸ்தி (ராம் பிரசாத் சவுத்ரி); எட்டா (தேவேஷ் ஷக்யா); சம்பல் (ஷபிகுர் ரஹ்மான் பார்க்); லக்னோ (ரவிதாஸ் மெஹ்ரோத்ரா); மற்றும் தௌராஹ்ரா (ஆனந்த் பதௌரியா)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Akhilesh Yadav Uttar Pradesh Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment