Advertisment

ம.பி-ல் சமாஜ்வாதி- காங்கிரஸ் மோதல்: ஒருங்கிணைப்புக் குழு தலையிட 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக சமாஜ்வாதி- காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
MP Ele.jpg

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி (SP) இடையே தீவிரமடைந்து வரும் மோதல் பற்றி இந்தியா கூட்டணியின் மற்ற கட்சிகள் கவலை தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்  வர உள்ள நிலையில் வேட்பாளர்கள் நிறுத்துவது, தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 'இந்தியா' கூட்டணியின் மற்ற கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி வருகின்றனர். 

Advertisment

இந்த மோதலின் மையத்தில் கூட்டணியின் நோக்கம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது, அதே நேரத்தில் பல சிறிய கட்சிகள் பாஜகவை தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்படுவதே பெரிய யோசனையாக கருதுகின்றன - அது மாநிலத் தேர்தல்களாக இருந்தாலும் சரி, அடுத்த வருடம் நடைபெறும் மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி என்று கூறி வருகின்றனர். 

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழனன்று, காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுத்தார். , ம.பி-யை போன்று உத்தரப் பிரதேசத்திலும் இதே பிரச்சனை வரும் என்று கூறினார். மேலும்  காங்கிரஸின் "நாங்கள் தான் பெரியவர்கள் " என்ற மனப்பான்மை குறித்த தங்கள் அச்சங்கள் உண்மையாகிவிடுமோ என்று கூறினார். இந்தியா கூட்டணியில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள கட்சிகளும் இதே கவலையைத் தெரிவித்தனர் என்றார்.  

மேலும் சமாஜ்வாதி- காங்கிரஸ் மோதலுக்கு மத்தியில்  இந்தியா கூட்டணியில் உள்ள  மற்ற கட்சியான ஆம் ஆத்மி சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள ம.பி., ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்தியா கூட்டணி கட்சியினர் சிலர் காங்கிரஸை அணுகி, சமாஜ்வாதிக்கு சில தொகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், காங்கிரஸ் தலைவர்கள், "டெட் ஹீட்" பந்தயத்தில் ஒவ்வொரு இடமும் முக்கியம் என்று கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய கடைசி பிட்ஸ்டாப்பாக இருக்கும் இந்த தேர்தல்  கட்சிக்கு முக்கியமானது என்றும் கூறியுள்ளனர். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய ஜே.டி.யூ மூத்த தலைவர் கே. சி தியாகி, இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு தலையிட வேண்டும் என்றார். "இந்த மாநிலத் தேர்தல்களில் உறவுகள் கெட்டுவிட்டால், அது அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று தியாகி கூறினார்.

பீகார் முதல்வரும், ஜேடி(யு) தலைவருமான நிதீஷ் குமார் கூட்டணியில் முதல் இடத்தைப் பிடித்தார் என்றும், திரிணாமுலின் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் போன்றவர்களுடன் காங்கிரஸை ஒன்றிணைத்ததாகவும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“காங்கிரஸ் இல்லாமல் அகில இந்திய அளவில் மாற்றுக் கட்சி இருக்க முடியாது என்று கூறியவர் நிதீஷ் குமார். பாட்னாவில் மம்தா, கெஜ்ரிவால், அகிலேஷ் ஆகியோருடன் சோனியா காந்தி அமர்ந்திருப்பதைப் பார்த்தோம். இது எங்களின் மிகப்பெரிய சாதனையாகும். இப்போது ராஜஸ்தான், எம்.பி., சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் இந்தியாவின் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸுக்கு, சிறிய கட்சிகளுக்கு விகிதாசார இடம் கொடுக்க வேண்டும்” என்று தியாகி கூறினார்.

மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெயர் குறிப்பிடாத மற்றொரு தலைவர் பேசுகையில், காங்கிரஸின் “big brother”  மனப்பான்மை எந்த நண்பர்களையும் வெல்லவில்லை என்று கூறினார். “இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் சங்கடமாக உணர்கிறார்கள்.   மேற்கு வங்கம், உ.பி., டெல்லி, பஞ்சாப் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது” என்று அவர் கூறினார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/delhi/india-grouping-parties-want-coordination-panel-to-play-peacemaker-8993012/

மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சிக்கு கடந்த காலங்களில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் இருந்தனர். புந்தேல்கண்டில் அதிக எண்ணிக்கையிலான யாதவ் மற்றும் குர்மி வாக்காளர்கள் உள்ளனர். ம.பி.யில் சமாஜ்வாதி கட்சிக்கு சில இடங்களை கொடுப்பதில் காங்கிரசுக்கு பிரச்னை ஏற்படக்கூடாது. உ.பி.யில் காங்கிரஸின் 25 தொகுதிகளுக்கு எதிராக இரண்டு மக்களவைத் தொகுதிகளை மட்டும் சமாஜ்வாதி கட்சி வழங்கினால் என்ன நடக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மத்திய தலைமை இதுவரை மவுனம் காத்து வருகிறது.  சமாஜ்வாதி-க்கும் காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் துரதிர்ஷ்டவசமானது என்று அக்கட்சி எம்.பி ஜாவேத் அலி கான் கூறினார், மேலும் கூட்டணியை அப்படியே வைத்திருப்பதும், பிராந்தியக் கட்சிகளுடன் அதை வலுப்படுத்துவதும் காங்கிரஸின் பொறுப்பு என்றும் வாதிட்டார். மேலும் இது வேறு எந்த மாநிலத்திலும் எழக் கூடாத வகையில் தீர்க்க வேண்டும் என்றார். 

பிஜேபி மற்றும் பிற வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டில் எஸ்.பி உறுதியாக இருப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார். கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது காங்கிரஸின் பொறுப்பு என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
India Madhya Pradesh All India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment