samajwadi party leader killed, sp leader killed, sambhal killing, sp leader killed sambhal, uttar pradesh, சமாஜ்வாதி கட்சி பிரமுகர், மகன் சுட்டுக் கொலை, உத்தரபிரதேசம், இந்திய செய்திகள், latest tamil news
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலை அமைத்தது தொடர்பாக எழுந்த தகராறில் சமாஜ்வாதி கட்சியின் பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பட்டப்பகலில் அரங்கேறி இருக்கும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாம்சோய் என்ற கிராமம் உள்ளது. இங்கு பஞ்சாயத்து தலைவராக இருப்பவரின் கணவர் லால் திவாகர், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய பிரமுகர் ஆவார். அவரும், அவரது மகனும், கிராமத்தில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டுள்ளனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சாலையை பார்வையிட்ட லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோரிடம் உள்ளூர் பிரமுகர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் செய்தவர்களில் சவிந்தர் என்பவரும் அவர் உடன் வந்தவரும் கையில் துப்பாக்கியை வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் எல்லையை மீற சவிந்தரும், அவருடன் வந்திருந்தவரும் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில், திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்கள்.
சம்பல் மாவட்டத்தின் கூடுதல் கண்காணிப்பாளர் அலோக் குமார் ஜெய்ஸ்வால் கூறுகையில், "நாங்கள் அடையாளம் கண்டுள்ள ஐந்துநபர்களுக்கும், அடையாளம் தெரியாத ஒரு சிலருக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். அவர்கள் உள்ளூர்வாசிகள். அந்த குறிப்பிட்ட பகுதியில் கட்டப்படும் சாலை தொடர்பாக இந்த சர்ச்சை ஏற்பட்டது. சுட்டுக் கொன்று தப்பியோடிய இருவரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“