Akhilesh Yadav | Samajwadi Party | உத்தரப்பிரதேசத்தில் 62 தொகுதிகளில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி (SP) இன்றுவரை 10 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் கோட்டையான கன்னோஜில் தேஜ் பிரதாப்பின் வேட்புமனு அறிவிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, தான் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை மாற்றினார்.
வெள்ளிக்கிழமை, வேட்புமனு பரிசீலனையின் போது, கட்சியின் ஷாஜஹான்பூர் வேட்பாளர் ராஜேஷ் காஷ்யப், ஏப்ரல் 22 அன்று தனது ஆவணங்களைத் தாக்கல் செய்தபோது, சமாஜ்வாதி கட்சி (SP) தனது பெயரை ரத்து செய்ததாகவும், அதற்குப் பதிலாக தனது உறவினரான மேல் சபை உருப்பினர் ஒருவரை வேட்பாளராக நிறுத்தியதாகவும் தெரிய வந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து வேட்பாளர்களை மாற்றுவது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “சாதி சமன்பாடுகளின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட ஏராளமான தலைவர்களை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.
ஆனால், அவர்களுக்கு மாவட்ட அலகுகளில் சமாஜ்வாதி தலைமையின் ஆதரவு அவசியம் இல்லை. உதாரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) இருந்து வந்தவர்கள் குறைந்தது 15 பேர். அவர்களுக்கும் எஸ்.பி. சீட்டு வழங்கியுள்ளது.
இப்போது, இந்த வெளியாட்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படும்போது, கட்சியின் உள்ளூர் தலைமை அவர்களை எதிர்க்கிறது. மற்றும் வேட்பாளர்களை மாற்ற தலைவர் கட்டாயப்படுத்துகிறார்.
கன்னோஜில், உள்ளூர் தலைமை தேஜ் பிரதாப்பின் வேட்புமனுவை எதிர்க்கத் தொடங்கியது.
பிஜேபி மற்றும் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), எஸ்பி இன் முன்னாள் கூட்டாளி, எஸ்பி யை "குழப்பமான கட்சி" என்று அழைத்தது.
கட்சியை பாதுகாத்து, சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஃபராஸ் உதின் கித்வாய் கூறுகையில், “மீனாட்சி லேகி, முன்னாள் ஜெனரல் வி கே சிங் மற்றும் பர்வேஷ் வர்மா உள்ளிட்ட பல எம்.பி.க்களுக்கு பாஜக டிக்கெட் மறுத்துவிட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் தங்கள் எம்.பி.க்கள் எந்தப் பணியையும் செய்யவில்லை என்பதை அறிந்தும் பல எம்.பி.க்களுக்கு பாஜக டிக்கெட் மறுத்துள்ளது. மேலும், அவர்கள் தங்களின் தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு தேவையற்ற பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்.
மீரட்:
சர்தானா எம்.எல்.ஏ. அதுல் பிரதானை நிறுத்துவதற்கு முன் சமாஜ்சாதி கட்சி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பானு பிரதாப் சிங்கை மார்ச் 15 அன்று வேட்பாளராக அறிவித்தது.
பின்னர் இறுதியாக முன்னாள் மீரட் மேயர் சுனிதா வர்மாவை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான ஏப்ரல் 4க்கு ஒரு நாள் முன்னதாக அறிவித்தது.
பாக்பத்:
2012 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சப்ராலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற மனோஜ் சவுத்ரியை கட்சி வேட்பாளராக நிறுத்தியது. பின்னர் சாஹிபாபாத் முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) எம்எல்ஏ அமர்பால் சர்மாவை அறிவித்தார்.
கௌதம் புத்த நகர்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் டாக்டர் மகேந்திர நகரை மார்ச் 16 அன்று கட்சி நிறுத்தியது. பின்னர் ராகுல் அவானாவை வேட்பாளராக அறிவித்தது. 12 நாட்கள் கழித்து மீண்டும் டாக்டர் மகேந்திர நகரை அறிவித்தது.
படவுன்
படவுனில்ல், முன்னாள் எம்.பி.யும், அகிலேஷின் உறவினருமான தர்மேந்திர யாதவை முதலில் களமிறக்கியது.
பின்னர் எஸ்பி தலைவரின் மாமாவும் மூத்த தலைவருமான ஷிவ்பால் யாதவ் என்று சில நாட்களுக்குப் பிறகு அறிவித்தது. பின்னர் ஏப்ரல் 14 ஆம் தேதி, ஷிவ்பாலின் மகன் ஆதித்யா இந்த தொகுதியில் தேர்தலில் களமிறங்குவார் என்று கட்சி அறிவித்தது.
மொராதாபாத்
கட்சி முதலில் சிட்டிங் எம்.பி. எஸ்.டி.ஹசனை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் அதன் சின்னம் பிஜ்னோர் முன்னாள் எம்.எல்.ஏ., மூத்த தலைவர் அசம் கானின் நெருங்கிய கூட்டாளியான ருச்சி வீராவுக்கு மார்ச் 28 அன்று வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று ஒதுக்கப்பட்டது.
பிஜ்னோர்
முன்னாள் நகினா எம்பி யஷ்வீர் சிங் வேட்பாளராக மார்ச் 15 அன்று கட்சி அறிவித்தது. ஒரு வாரம் கழித்து, நூர்பூர் எம்எல்ஏ ராம் அவதார் சைனியின் மகன் தீபக் சைனியை களமிறக்கியது.
சுல்தான்பூர்
கட்சி மாநில செயலாளர் பீம் நிஷாத்தை சுல்தான்பூரில்நிறுத்தியது. ஆனால் முன்னாள் பிஎஸ்பி மந்திரி ராம் புவல் நிஷாத்தை ஏப்ரல் 14 அன்று வேட்பாளராக அறிவித்தது.
அக்கட்சியின் வேட்பாளரை மீண்டும் மாற்றலாம் என்ற யூகம் உள்ளது.
மிஸ்ரிக்:
மிஸ்ரிக்கில் முதலில் முன்னாள் எம்பி ராம சங்கர் பார்கவாவை அறிவித்தது. பின்னர் ம்எல்ஏ ராம் பால் ராஜ்வன்ஷி என்றும், அதன் பின்னர் அவரது மகன் மனோஜ் என்றும் மாற்றி, இறுதியாக மனோஜின் மனைவி சங்கீதாவை வேட்பாளராக நிறுத்தியது.
இறுதியில், முதலில் அறிவித்த ராம சங்கர் பார்கவாவையே வேட்பாளராக அறிவித்தது.
கன்னோஜ்:
அகிலேஷின் மருமகன் தேஜ் பிரதாப் யாதவ் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று ஏப்ரல் 22 அன்று கட்சி கூறியது. ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு எஸ்பி தலைவரே யாதவ் குடும்ப கோட்டையாக இருந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார். எஸ்பி 1999 முதல் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது. 2019 ல் பாஜக வெற்றி பெற்றது.
ஷாஜஹான்பூர்:
ஷாஜஹான்பூரில் கட்சி 43 வயதான ராஜேஷ் காஷ்யப்பை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் அவருக்குப் பதிலாக 26 வயதான ஜோத்ஸ்னா கோண்ட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது வெள்ளிக்கிழமை அவருக்குத் தெரியவந்தது.
“எனது பெயர் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இப்போது ஜோத்ஸ்னா கோண்ட் அவர்களின் வேட்பாளராக இருப்பதாகவும் அகிலேஷ் யாதவின் கடிதம் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தைப் பார்த்ததும், கட்சி மற்றும் தலைவரால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்,” என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேர்தலுக்குத் தயாராகி வருவதாகவும் காஷ்யப் கூறினார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : SP names, changes candidates in 10 seats; says ‘listening to workers’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.