Chandra Priyanka resignation: புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா தொடர்பாக மாநிலத்தின் சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
Advertisment
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “சந்திர பிரியங்கா ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்து ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அவர் விதிமுறைகளை மீறி நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பி விட்டார்.அதற்கு முன்பே அமைச்சரை நீக்கி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
இந்த இரு கடிதமும் மத்திய அரசுக்கு சென்றதால் குழப்பம் ஏற்பட்டது இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு ஆளுநர் அளித்த விளக்கத்தை அடுத்து சந்திர பிரியங்காவை நீக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்றார். தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் நாராயண சாமி குறித்து பேசுகையில், “பின் வாசல் வழியாக முதலமைச்சரானவர் என்னை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நாராயணசாமி தற்போது காங்கிரஸில் என்ன பொறுப்பில் இருக்கிறார்” எனக் கேள்வியெழுப்பினார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“