முன்னாள் ஆளுநர் பி.சதாசிவம் இந்த வார தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, அவருக்கு சிறப்பு ஆலோசனை ஒன்றை கூறியுள்ளார். இருவரும் பேசுகையில், நீங்கள் எடுத்துள்ள நலத்திட்டங்கள் குறித்து தென் மாநில விவசாயிகள் பலருக்கு தெரியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். உடனடியாக, தனது அரசின் திட்டங்களை விளக்கும் புத்தகத்தை அவரிடம் பிரதமர் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சதாசிவம் புத்தகத்தை வாங்கிக்கொண்டு, தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகள் இந்தி, ஆங்கிலத்தில் உள்ள இதனை எவ்வாறு படித்து பின்பற்றுவார்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், இவை பிராந்திய மொழிகளில் இருந்தால் நிச்சயம் அவர்களை சென்றடையும் என தெரிவித்துள்ளார்.
சதாசிவமின் ஆலோசனையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அதே போல், தானும் ஒரு விவசாயி என்றும், தமிழ்நாட்டில் நெல், தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றும் பிரதமரிடம் சதாசிவம் கூறியதாக தெரிகிறது.
மாஸ்க் முக்கியம் பாஸ்
லக்கிம்பூர் கெரி வழக்கு தொடர்பாக புதன்கிழமை அவையில் அமளி ஏற்படுகையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் மாஸ்க் அணியாமல் கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இதனை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாஸ்க் அணியாமல் சபாநாயகர் மேஜையை பக்கத்தில் அமர்ந்திருக்கும் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அருகில் வருவது ஏற்புடையதல்ல.
நாம் இன்னும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வரவில்லை. அதிகாரிகளின் உயிர்களை பணயம் வைக்காதீர்கள். மக்கள் பிரதிநிதிகளான நீங்கள், மாஸ்க் அணியாமல் இருப்பது சரியா என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரும் அவரது அமைச்சரவை சகாவான அஷ்வனி வைஷாவும் மாஸ்க் அணியவில்லை என்பதை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டினர்.
முதலில் பாதுகாப்பு
மக்களவை கூட்டத்தொடரில் தவறாமல் கலந்துகொள்ளும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கொரோனா காரணமாக மழைக்காலக் கூட்டத் தொடரில் பெரும்பாலானவற்றை தவறவிட்டுள்ளார். ஒமிக்ரான் காரணமாக தனது தாயார் அவைக்கு வந்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ராகுல் காந்தி கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்தும் ராகுல் காந்தி, இந்த வார தொடக்கத்தில் சிபிஎஸ்இ தேர்வுத் தாளின் உள்ளடக்கம் குறித்து ஜீரோ ஹவர் சமர்பிக்கும்போது சோனியா காந்தி மாஸ்க் அணிய வேண்டும் என விரும்பினார்.ஆனால், அவர் அணியவில்லை.
இருப்பினும், புதன்கிழமை அவைக்கு வந்த சோனியாவை நடுவில் உள்ள இருக்கையில் அமர ராகுல் வலியுறுத்தினார். லக்கிம்பூர் விவகாரம் என்பதால், எம்.பிக்கள் முன்னாடி வரலாம் என்ற காரணத்தால், பாதுகாப்பு கருதி அவரை முதல் வரிசை இருக்கையில் அமர அனுமதிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil