Sabarimala Special Trains : சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை முதல் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் வரை இயங்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிக்கையின்படி ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு:
Advertisment
சுவிதா ஸ்பெஷல்:
சென்னை - கொல்லம் சுவிதா ஸ்பெஷல் நவம்பர் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல், திரும்பும் போது, கொல்லம் - சென்னை சுவிதா ஸ்பெஷல் நவம்பர் 17, 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு கொல்லமில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.
சிறப்பு கட்டண சிறப்பு ரயில்:
கொல்லம் - சென்னை சிறப்பு கட்டணம் சிறப்பு ரயில், நவம்பர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு கொல்லமில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
நவம்பர் 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில், கொல்லமில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில்கள் மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடையும்.
இதேபோல், சென்னை - கொல்லம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், நவம்பர் 17 மற்றும் 24 தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லம் அடைகிறது.
நவம்பர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - திருவனந்தபுரம் ரயில்கள்:
சென்னை - திருவனந்தபுரம் சிறப்பு கட்டண சிறப்பு ரயில், நவம்பர் 21 மற்றும் 28 தேதிகளில் இரவு 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகிறது.
திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு கட்டண சிறப்பு ரயில் திருவனந்தபுரத்திலிருந்து நவம்பர் 20 மற்றும் 27 மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை அடையும்.