46 புதிய நான்-ஸ்டாப் ஃப்ளைட்களை அறிமுகம் செய்யும் ஸ்பைஸ்ஜெட்…

இந்நிறுவனத்திடம் மொத்தம் 112 விமானங்கள் உள்ளன. அதில் 77 விமானங்கள் போயிங் 737எஸ் வகையை சேர்ந்தவையாகும்

By: September 29, 2019, 12:42:46 PM

Spicejet introduces 46 new non-stop flights from October : இந்தியாவில் சுற்றுலாத்துறையும், விமானங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு  நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. மக்களின் தேவைகளை அறிந்து பல புதிய மார்க்கங்களில் விமான சேவைகளை விமான நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றது.

ஜெய்பூர், விஜயவாடா, விசாகாப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் ஔரங்கபாத் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் உள்நாட்டு விமான போக்குவரத்துகளை அறிமுகம் செய்ய உள்ளது ஸ்பைஸ்ஜெட். மும்பையில் இருந்து ராஜ்கோட், சென்னையில் இருந்து துர்காபூர் உள்ளிட்ட 46 புதிய மார்க்கங்களில் ஸ்பெஸ்ஜெட் விமான சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய சேவைகளுக்காக போயிங் 737எஸ் மற்றும் பாம்பார்டியர் க்யூ 400 உள்ளிட்ட விமானங்களை பயன்படுத்த உள்ளது அந்நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே இந்நிறுவனம் 52 உள்நாட்டு போக்குவரத்தினையும் 10 சர்வதேச போக்குவரத்தினையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திடம் மொத்தம் 112 விமானங்கள் உள்ளன. அதில் 77 விமானங்கள் போயிங் 737எஸ் வகையை சேர்ந்தவையாகும். ஏர்பஸ் ரக விமானங்கள் நூறை வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : மூன்று யானைகள் இடம் மாற்றும் பிரச்சனை – நடந்தது என்ன?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Spicejet introduces 46 new non stop flights from october

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X