Supreme Court of india Tamil News: உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பது உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையாகும். இந்த அமைப்பில் தலைமை நீதிபதியும் அதற்குப்பிறகு உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் இடம் பிடிப்பார்கள். அதன்படி, தற்போது கொலிஜியம் அமைப்பில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளான டி ஒய் சந்திரசூட், எஸ் கே கவுல், எஸ் அப்துல் நசீர் மற்றும் கேஎம் ஜோசப் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு யு லலித், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கர் ஜா, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே .வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தனது பரிந்துரைகளாக கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு எழுத்துப்பூர்வக் குறிப்பு மூலம் கடிதம் அனுமப்பியுள்ளார். தலைமை நீதிபதி இவ்வாறு பெயர்களை பரிந்துரைப்பது என்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
தலைமை நீதிபதியின் கடிதத்திற்கு எதிர்ப்பு
இந்நிலையில், தலைமை நீதிபதி யு யு லலித் கொலிஜியம் அமைப்பிற்கு எழுதியுள்ள கடிதத்திற்கு, அமைப்பில் இடம்பித்துள்ள இரு நீதிபதிகள் தங்களது எதிப்பினை பதிவு செய்துள்ளனர். நேருக்கு நேர் கலந்தாலோசிப்பதற்குப் பதிலாக, "கொலிஜியம் கூட்டத்தை சுழற்சி முறையில் நடத்துவது" என்பது கேள்விப்படாதது என்றும், அதில் தாங்கள் ஒரு கட்சியாக இருக்க முடியாது என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் தெரிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்திற்கான நியமனங்களுக்கான பெயர்களைத் தீர்மானிப்பதை முன்மொழிவு மூலம் ஏன் செய்ய முடியாது என்பதை அவர்கள் ஏற்கனவே அக்டோபர் 1 ஆம் தேதி தலைமை நீதிபதிக்கு தனித்தனியாக எழுதிய கடிதங்களில் "தங்களைத் தெளிவாகக் கூறியுள்ளனர்" என்று இரு நீதிபதிகளும் கருதுவதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, செப்டம்பர் 30 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கொலிஜியம் கூட்டம் நடைபெறவில்லை. தசரா விடுமுறைக்கு முந்தைய செப்டம்பர் 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலை நாளாக இருப்பதால், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அதற்கு முன் பட்டியலிடப்பட்ட அனைத்து வழக்குகளையும் விசாரித்தது. நீதிபதி சந்திரசூட் மாலை வரை நீதிமன்றத்தை இரவு 9.10 மணி வரை நடத்தினார். இதனால், அவருக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
தலைமை நீதிபதி லலித் நவம்பர் 8-ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அவர் வசம் மிகக் குறைவான நேரமே உள்ளது. மரபின்படி, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு, வெளியேறும் தலைமை நீதிபதிக்கு அரசு கடிதம் எழுதும். தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மிக மூத்த நீதிபதியின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கிறார்.
ஒரு புதிய பெயர் பரிந்துரைக்கப்பட்டவுடன், தற்போதைய தலைமை நீதிபதி பொதுவாக நீதிபதிகள் நியமனம் தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, அதை புதிய தலைமை நீதிபதியிடம் விட்டுவிடுவார்.
அக்டோபர் 1 ஆம் தேதி தலைமை நீதிபதி லலித்தின் கடிதத்திற்கு பதிலளித்த கொலிஜியம் உறுப்பினர்களில் ஒருவர், இந்த முன்மொழிவுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். எவ்வாறாயினும், மற்ற இரண்டு உறுப்பினர்கள், கொலீஜியம் கூட்டத்தை "சுழற்சி மூலம்" நடத்த முயற்சிக்கும் செயல்முறையை கண்டித்து, அது குறைபாடு என்று கூறினார். மேலும், தலைமை நீதிபதியின் கடிதத்தில் "முன்மொழியப்பட்ட பெயர்களுக்கு அவர்கள் உடன்படவில்லை" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு உறுப்பினர்களும் பரிந்துரைகளை தொடங்கும் விதத்தை மட்டுமே எதிர்த்ததாகவும், பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் தகுதியின் அடிப்படையில் அல்ல என்றும் அறியப்படுகிறது. நான்காவது நீதிபதி வெளியில் இருப்பதாகவும், அவர் திரும்பி வந்ததும் பதில் அளிப்பார் என்றும் கூறினார்.
ஆரம்பகால எதிர்ப்பைத் தொடர்ந்து, அக்டோபர் 2 ஆம் தேதியன்று, தலைமை நீதிபதி, நீதிபதிகள் தங்கள் நிலைப்பாட்டை "மறுபரிசீலனை செய்ய" வலியுறுத்தியுள்ளனர். மேலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் குறித்த தங்கள் கருத்துக்களைக் குறிப்பிடும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் கொலீஜியம் கூட்டத்தை "சுழற்சி மூலம்" நடத்த அனுமதித்ததன் விளைவை ஏற்படுத்தும் என்று கருதிய நீதிபதிகள் இதைச் செய்யவில்லை.
இதுவரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒரே ஒரு பரிந்துரையை மட்டுமே அளித்துள்ளார். அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா. 34 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் தற்போது 29 நீதிபதிகள் உள்ளனர். நீதிபதி ஹேமந்த் குப்தா அக்டோபர் 16ம் தேதியும், தலைமை நீதிபதி லலித் நவம்பர் 8ம் தேதியும் ஓய்வு பெறுவதால், காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்கள் 7 ஆக உயரும்.
பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்டால், 2028ல் விஸ்வநாதன் தலைமை நீதிபதியாக வர வாய்ப்புள்ளது. 2009ல் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட விஸ்வநாதன், 2013 இல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஆனார்.
கொலிஜியம் குறைந்தபட்சம் ஒரு பரிந்துரையையாவது வழங்குவதில் ஆர்வமாக இருந்தபோது, கொலீஜிய அமைப்பின் ஒரு பிரிவினர், அது நீதிபதிகளுக்கு "நியாயமற்றதாக" கருதப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தில் இருந்து ஒருவரை தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யக்கூடாது என்று கருதுவதாகவும் தகவல்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளன.
அப்படி, பார் கவுன்சிலில் உள்ள மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், 1971ல் நீதிபதி எஸ்.எம்.சிக்ரி, தலைமை நீதிபதி லலித் மற்றும் 2028ல் உயர் பதவியில் இருக்கும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோருக்குப் பிறகு பார் கவுன்சிலில் இருந்து தலைமை நீதிபதி செல்லும் நான்காவது தலைமை நீதிபதியாக அவர் இருப்பார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.