இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, RML மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எடுக்கப்படிருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த சிறார்களிடம் பேசிய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். உங்கள் நண்பர்களிடம் எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துங்கள் என்றார்.
கோவிட் முன்னெச்சரிக்கைகள்
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தல் காரணமாக, பணியாளர் அமைச்சகம் ஜனவரி 31 ஆம் தேதி வரை எந்தவொரு அமைச்சகம் அல்லது துறையிலும் துணைச் செயலர் நிலைக்குக் கீழே உள்ள அதிகாரிகளில் 50% பேர் மட்டுமே நேரடியாக பணிக்கு வர வேண்டும். நேரில் நடத்தப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள கூட்டங்களை தவிர, மற்ற அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக நடத்திட வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க, அலுவலக நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனவரி 31 வரை அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளி ஊழியர்களுக்கு அலுவலகம் வருவதில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்கள்
பல்வேறு எட்-டெக் தளங்களை உள்ளடக்கிய அரசாங்க நிகழ்ச்சியில் தொழில்நுட்ப கோளாறால் சிறிது நேரம் சிக்கல் ஏற்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இடையூறுகள் நிகழ்வை நிறுத்திய விதம் தடையில்லா இணைய அணுகலைப் பற்றிய முழுமையான கட்டாயத்தை பிரதிபலிக்கிறது.
உங்கள் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என நினைத்துப் பாருங்கள். உங்களால் வாட்ஸ்அப்பில் யாரையும் தவறாகப் பேசவோ, யாரையாவது பாராட்டவோ, கிசுகிசுக்களில் ஈடுபடவோ முடியாது என்றார். அமைச்சரின் பேச்சு,அதிகாரிகளிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil