Advertisment

ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் : முக்கிய ஆதாரங்களை இலங்கையிடம் கொடுத்த என்.ஐ.ஏ

அவர்களிடம் இருந்த வீடியோக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போதே இலங்கையில் தாக்குதல் நடைபெறலாம் என்று இந்தியா எச்சரிக்கை செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sri Lanka Easter Sunday Attacks NIA Shared numbers of five locals linked to IS with Sri Lanka

Sri Lanka Easter Sunday Attacks NIA Shared numbers of five locals linked to IS with Sri Lanka

Deeptiman Tiwary

Advertisment

Sri Lanka Easter Sunday Attacks : கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி புனித ஞாயிறு அன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக தேவாலயங்களில் குவிந்து கிடந்தனர். அப்போது காலை 9 மணி முதல் தொடர்ந்தாற்போல் 6 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. மூன்று தேவாலயங்கள் முற்றிலும் சேதமடைந்தன. அந்த கோர தாக்குதலில் 250 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கில கட்டுரையைப் படிக்க

உலக நாடுகளின் உதவியுடன், இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் முனைப்பில் இருக்கிறது இலங்கை. இந்நிலையில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகத்தை உருவாக்கியுள்ள 5 இலங்கை நாட்டவர்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளது இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை.

அந்த 5 நபர்கள இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தி இறந்துபோன்ற இரண்டு முக்கிய தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களுடைய போன் அழைப்புகள் இருந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நபர்களுடன் இந்த ஐந்து நபர்களும் நேரடியாக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் குறித்த முழு விபரங்களும் இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ இலங்கை தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றார்களா என்பதை இனிமேல் தான் விசாரனை செய்ய வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளது.

இலங்கை காத்தான்குடியில் வசித்து வந்த ஜஹ்ரான் ஹாசிம் என்ற மதபோதகர் இஸ்லாமியர்களுக்காக அனைவரும் ஒன்று கூடுவோம் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதே நேரத்தில் கோவையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு ஆள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இந்த வீடியோக்கள் சிக்கியது. இதனை பார்த்து விசாரணை மேற்கொண்ட போதே இலங்கையில் தாக்குதல் நடைபெறலாம் என்று இந்தியா எச்சரிக்கை செய்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்கள் நடைபெற்ற உடனே இந்தியாவில், கேரளத்தை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்தது. அவர் காசர்கோட்டில் இருந்து 2016ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இமைப்பில் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கின்றார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய ஹாசிமின் வீடியோக்கள் வைத்திருந்தாலும் இணந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டாக பயன்படுத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் யூசஃப் இப்ராஹிமின் இரண்டு மகன்களான இன்ஷாஃப் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் இருவர்களுடனும் தொடர்பில் சில இந்தியர்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது என்.ஐ.ஏ. இவர்கள் குறித்த முழு தகவல்களையும் அளி்த்துள்ளது என்.ஐ.ஏ. இவர்கள் அனைவரும் ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்டவர்களா இல்லை வர்த்தக ரீதியான தொடர்பில் இருந்தவர்களா என்பதை கண்டறிய வேண்டும் என்று உள்துறை அமைச்சரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் பட்டப்படிப்பை முடித்த அதில் அமீஸ் என்பவரை இந்தியாவில் கைது செய்துள்ளனர் என்.ஐ.ஏ. சமூக வலைதளங்களில் அதில் ஏ.எக்ஸ். என்ற பெயரில் இயங்கி வரும் இவர் ஐ.எஸ். குழுக்கள் இயங்கி வரும் சில முக்கியமான சமூக வலைதள க்ரூப்களில் இயங்கி வருகின்றார். இந்தியாவில் இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களுடன் இவர் தொடர்பில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள யூதர்களின் தேவாலயம் ஒன்றை அழிக்க திட்டமிட்ட உபேத் மிர்ஸா, காசிம் ஸ்திம்பெர்வாலா என்ற இரு நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் சில தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதிலை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்த முறையான ஆதாரத்திற்காக காத்துள்ளனர் இலங்கை அதிகாரிகள்.

மேலும் முந்தைய விசாரணைகளில் அடிக்கடி இந்தியாவில் வந்து ஜஹ்ரான் ஹாசிம் தங்கியுள்ளார் என்று எழுந்த தகவல்களுக்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதையும் இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

Sri Lanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment