Advertisment

இலங்கை நெருக்கடி..  இந்தியாவின் சர்க்கரை மற்றும் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

பொருளாதார நெருக்கடி வெடித்ததால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Sri lanka crisis

Sri Lankan crisis has affected Indian trade

இலங்கை சர்க்கரை, திராட்சை மற்றும் வெங்காயம் போன்ற விவசாய பொருட்களுக்கான முக்கிய இடமாகும். இந்நிலையில் அங்கு நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி, இந்திய வர்த்தகத்தையும் பாதித்துள்ளது.

Advertisment

பொருளாதார நெருக்கடி வெடித்ததால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தை நிறுத்தி வைத்துள்ளனர், சிலர் தங்களுக்கு வரவேண்டிய பணம் இன்னும் செலுத்தாமல் இருப்பதாக புகார் கூறினர்.

2021-22 நிதியாண்டில் இலங்கை நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதி பில்  5,208.3 மில்லியன் டாலராக இருந்தது - இது ஒவ்வொரு ஆண்டுக்கும் 65 சதவீத வளர்ச்சியாகும்.

பொறியியல் பொருட்கள், பால் பவுடர், சர்க்கரை, வெங்காயம் மற்றும் திராட்சை ஆகியவை இலங்கைக்கான முக்கிய ஏற்றுமதியாகும். கடல் வழியாக எளிதான இணைப்பைக் கருத்தில் கொண்டு, இந்திய ஏற்றுமதியாளர்கள் பொதுவாக தங்கள் சரக்குகளை துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் அனுப்புகிறார்கள்.

இந்திய சர்க்கரையைப் பொறுத்தவரை, கொல்கத்தா சந்தையின் விரிவாக்கம் என்று ஏற்றுமதியாளர்கள் அழைக்கும் வகையில் இலங்கை மிகவும் முக்கியமான சந்தையாக இருந்தது. இலங்கை ஒவ்வொரு மாதமும் உட்கொள்ளும் 40,000-50,000 டன் சர்க்கரையில் 90 வீதம் இந்தியாவிலிருந்து பெறப்படுகிறது.

இருப்பினும், கடந்த மூன்று மாதங்களில், குறிப்பாக பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து, இந்திய ஏற்றுமதியாளர்கள் இலங்கைக்கு தங்கள் ஏற்றுமதியை நிறுத்திவிட்டனர்.

MEIR கமாடிட்டிஸ் நிர்வாக இயக்குனர் ரஹில் ஷேக் கூறுகையில், தற்போதைய பருவத்தில் அதிகப்படியான சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.

ஏற்றுமதியாளர்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதால், இந்த சீசனுக்கான ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறைவு,'' என்றார்.

இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்ட கடன் வரியின் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் உணவு இறக்குமதிக்காக இலங்கையால் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிருந்து, இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில், இந்தியா 1.62 லட்சம் டன் சமையலறை பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனமான ரெயின்போ இன்டர்நேஷனல் உரிமையாளர் அபிஜித் பசாலே, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் இலங்கைக்கு வெங்காயம் அனுப்புவதை நிறுத்தியுள்ளனர். இலங்கைக்கு ஏற்றுமதி செய்த விற்பனையாளர்கள் இன்னும் தங்கள் பணத்தை பெறவில்லை.

பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய வெங்காயத்திற்கு இலங்கையை விட பங்களாதேஷ் முக்கியமான சந்தையாகும்” என்று கூறினார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment