Advertisment

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு; புதுச்சேரி அமைச்சர் கடும் கண்டனம்

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pdy minister

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் மாணிக்கவேல், தினேஷ், கார்த்திசேன், செந்தமிழ் உள்ளிட்ட 13 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

Advertisment

இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி படகை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

படகின் உரிமையாளர் ஆனந்தவேலுவின் படகு ஏற்கனவே இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மற்றொரு புதிய விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகை மீட்டு தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு படகிலிருந்த மீனவர் தாமரைச்செல்வன் இது குறித்து தெரிவித்த போது "இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கை கடற்படையினர் காரைக்கால் படகு ஒன்றின் மீது  துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் அதில் இரண்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

இது குறித்த தகவலை தெரிவிக்க தாங்கள் கரை திரும்பியதாகவும், அப்போது இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்க முயற்சித்த போது அவர்கள் அந்த தகவலை ஏற்கவில்லை எனவும் மனக்குமுறலுடன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தது என்று புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் படுகாயம் அடைந்து யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது துரதிஷ்டவசமானது, இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமில்லாமல் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கதக்கது” என்றார். 

கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பது என்பது அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது, இது போன்று விவகாரங்களில் இலங்கை கடற்படை நடந்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.

மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளார் மேலும் இலங்கை தூதரகத்தின் மூலம் 13 பேரையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார். 

துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் லட்சுமி நாராயணன்..

இலங்கை கடற்பகுதியில் அத்து மீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் கடலில் மீன் பிடிக்கும்போது தொடர்ந்து இலங்கை கடற்படை இதுபோன்று நடந்து கொள்வதால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமுடன் மீன்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

செய்தி: பாபு ராஜேந்திரன்

Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment